நான் செத்துட்டா என் பையனை யார் பாத்துப்பா? பப்லு பிரித்விராஜ் ஓபன் டாக்..

Actors Babloo Prithiveeraj Tamil Actors
By Jai Oct 08, 2026 12:00 PM GMT
Report

பப்லு பிரித்விராஜ்

தமிழ், தெலுங்கு, பாலிவுட் என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் பப்லு பிரித்விராஜ். 23 வயதான ஷீத்தல் என்பவரை காதலித்து வந்த பப்லு, கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். ஏற்கனவே திருமணமாகி மகன் இருக்கும் நிலையில் விவாகரத்து செய்து பிரிந்த பப்லு, தற்போது மகனுடன் வாழ்ந்து வருகிறார். சமீபத்திய பேட்டியொன்றில் தன் மகன் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

நான் செத்துட்டா என் பையனை யார் பாத்துப்பா? பப்லு பிரித்விராஜ் ஓபன் டாக்.. | Babloo Prithviraj Emotional Interview About Son

அதில், தொகுப்பாளர், உங்கல் லைஃப்ஸ்டைல் பார்க்கவே ரொம்ப ஆடம்பரமா இருக்கு, சம்பளத்தை எல்லாம் இதுக்குத்தான் செலவு செய்வீர்களா? என்ற கேள்வியை கேட்டார். அதற்கு பப்லு, நான் போட்டிருக்கும் ஷூ ரூ. 20000, இந்த வார்ச் ரூ. 50 ஆயிரம், நான் சம்பாதிக்கும் பணம் எல்லாம் இதுக்குத்தான் போகுது, நான் கிட்டத்தட்ட 9 வருஷமா கடுமையான டிப்ரஷன்ல இருந்தேன். நாம என்ன பண்றோம்.

இதெல்லாம் எதுக்காக, யாருக்காக? நாளைக்கு நான் செத்துட்டா இதையெல்லாம் கூடவா கொண்ட் போகப் போறேன்னு யோசிச்சு யோசிச்சு என்னால் டிப்ரஷன்ல இருந்து வெளியே வர முடியல என்று பேசினார்.

நான் செத்துட்டா என் பையனை யார் பாத்துப்பா? பப்லு பிரித்விராஜ் ஓபன் டாக்.. | Babloo Prithviraj Emotional Interview About Son

இதனைதொடர்ந்து பேசிய பப்லு, தன்னுடைய ஆட்டிசம் பாதித்த மகனை நினைத்து வேதனையடைந்து பேசியுள்ளார்.

கொரானா காலத்தில் என் நண்பர்கள் பலர் இறந்துவிட்டார்கள். எனக்கும் இரண்டு முறை கொரானா வந்தது, நான் செத்து போயிருந்தா என் பையனை யார் பார்த்துப்பாங்க, நான் இல்லாம போயிட்டேன்னா, என் பையனுக்கு என்ன பண்ணப்போறேன்? என்பதுதான் என் டிப்ரஷனுக்கான முக்கிய காரணமே. அதுக்கப்புறம்தான் தெளிவானேன்.

நான் செத்துட்டா என் பையனை யார் பாத்துப்பா? பப்லு பிரித்விராஜ் ஓபன் டாக்.. | Babloo Prithviraj Emotional Interview About Son

என் பையனுக்காக நான் நிறைய சம்பாதிக்கணும், அவனை பாதுகாப்பா வச்சுக்கணும். நான் போனதுக்கப்புறம் அவனை பார்த்துக்க பணம் இருக்கணும், பணம் இருந்தா ஊரே அவனை பார்த்துக்கும், அதனால்தான் இப்போ நிறைய உழைச்சுச் சம்பாதிக்கிறேன்.

என் பையன் மாதிரி இருக்குற ப்லா குழந்தைகளையும் நான் பார்த்துக்கணும், இது கேட்க சினிமா மாதிரி இருக்கலாம். ஆனால் இதுதான் என்னோட லைஃப் கோல் என்று பிரித்விராஜ் பேட்டியளித்துள்ளார்.