32 வயசு வித்தியாசம்.. 56 வயதில் 24 வயது பெண்ணுடன் திருமணம் செய்யும் பப்ளு - வருங்கால மனைவி விளக்கம்
அதிகளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது நடிகர் பப்லு பிரித்திவிராஜ் அவர்களிடன் இரண்டாம் திருமண விவகாரம். சில வாரங்களுக்கு முன் 23 வயதான மலேசிய பெண்ணை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாது. இதுகுறித்து பப்லு கூறுகையில், எனக்கு திருமணம் நடைபெறுவது குறித்து நான் யாருக்கும் சொல்லாமல் இருக்க மாட்டேன்.
எனக்கு 56 ஷீத்தலுக்கு 24
இத்தனை கேள்விகள் எழுந்தாலும் திருமணம் செய்யவுள்ளது உண்மை தான் என்று கூறியிருந்தார். தற்போது இன்னொரு விளக்கமும் அளிக்க பேட்டியொன்றில் அவர் திருமணம் செய்யவுள்ள பெண்ணோடு சேர்ந்து விளக்கம் அளித்துள்ளார். எனக்கு 56 ஷீத்தலுக்கு 24 வயதாகிறது என்பதை ஏன் இவ்வளவு பெரியதாக்க வேண்டும்.
அதற்கு காரணம் ஒரு நிகழ்ச்சியில் என் மனைவி என்று கூறியது கல்யாணம் செய்துவிட்டார் என்று பெருசா ஊதிட்டாங்க, அதைதவிர நான் என்ன தப்பு பண்ணோம். உங்களை தாண்டி பல விசயங்களை பார்த்தவன். அதை ஏன் நான் மூடி மறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
வருங்கால மனைவி ஷீத்தல்
பல நடிகர் நடிகைகள் எனக்கு கால் செய்து ஷீத்தலிடம் பேச விருப்பப்பட்டனர் என்று கூறினார். மேலும் இதற்கு பப்ளுவின் வருங்கால மனைவி ஷீத்தல், எங்களுக்குள் பிரச்சனை என்றால் எங்களிடமே முடிந்துவிடும் யாரிடம் பிரச்சனை என்றால் அவர்களிடம் பேசிவிடுவேன். அதேபோல் தான் பப்ளிக்காக இந்த விசயம் வந்ததற்காக அதற்கு விளக்கம் அளிக்கிறோம்.
இதெல்லாம் தேவையில்லாத கேள்வி என்று தெரிவித்துள்ளார். மேலும் வயது ஒரு விசயம் கிடையாது , அதை பார்த்துக்கொள்வேன் என்கிறார். வயது குறித்து பல விசயங்களை கூறியும் இப்போது நாம் சந்தோஷமாக இருப்பதை நினையுங்கள் என்று உருக்கமுடன் பேசியிருக்கிறார்.