தாய் தந்தை மரணமடைந்து மன அழுத்தத்தில் இருந்த காதல் பாபு! ஊரடங்கால் ஏற்பட்ட பரிதாபம்

lockdown dead babu Kaadhal
By Jon Mar 27, 2021 02:54 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத காவிய படமாக இருப்பது காதல் படம். அப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தனர். பரத், சந்தியா உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்திருந்த இப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில்நடித்தவர் தான் காதல் பாபு. விருச்சிககாந்த் என்ற சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர் இயக்குநரிடம் நடிக்கும் வாய்ப்பினை கேட்டு வரும் காட்சியில் நடித்து பிரபலமானர்.

இதையடுத்து படங்கள் அவருக்கு கிடைக்காமல் இருக்கும் போது தன்னுடைய தாய் தந்தை மரணத்தால் மன அழுத்தத்தில் இருந்து ரோட்டில் சுற்றித்திரிந்தார். அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதை கண்ட சில பிரபலங்கள் அவருக்கு உதவி செய்தனர். பின்பு கொரானா ஊரடங்கால் மிகவும் கஷ்டப்பட்ட பாபு சாலையோரத்தில் நின்று இருந்த ஆட்டோவில் படுத்து உறங்கிய நிலையில் மரணமடைந்துள்ளார்.

இதையரிந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற கலைஞர்கள் சினிமாத்துறையில் பலர் கண்டும் காணாத நிலையில் தள்ளப்பட்டு மரணிக்கும் சம்பவம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.