18 வயதான விக்ரமின் ரீல் மகள் சாரா அர்ஜுனா இது!! இப்படி ஆளே மாறிட்டாங்க...
பேபி சாரா என்றவுடன் நம் அனைவருக்கும் நியாபகம் வரும் திரைப்படம் தெய்வத்திருமகள் தான். இப்படம் தான் பேபி சாராவிற்கு தமிழ் சினிமாவில் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. குறிப்பாக தெய்வத்திருமகள் படத்தின் விக்ரமுடன் இணைந்து நீதிமன்றத்தில் நடிக்கும் காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டது. இப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவான சைவம் படத்தில் நடித்தார்.
இப்படமும் மக்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதன்பின் பொன்னியின் செல்வன் படத்தில் என்ட்ரி கொடுத்த சாரா பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார். தெய்வத்திருமகள், சைவம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக பார்த்த பேபி சாராவா இது என அனைவரும் திகைத்துபோனார்கள்.
அந்த அளவிற்கு மாறிவிட்டார் சாரா. பொன்னியின் செல்வனில் நந்தியின் சிறு வயதுகதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்ற சாரா அடுத்ததாக Quotation Gang எனும் படத்தில் நடித்துள்ளார். ஜெர்ஸி படத்தின் இயக்குனர் Gowtam Naidu இயக்கத்தில் Magic படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 18 வயதை தாண்டிய சாரா அர்ஜுனின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.