என்ன இப்படி இறங்கிட்டீங்க... அனிகாவை ஓரங்கட்ட வரும் பேபி சாரா!..
Anikha Surendran
Tamil Actress
Actress
By Dhiviyarajan
ஏ. எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் 2011 -ம் ஆண்டு வெளியான "தெய்வ திருமகள்" படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் பேபி சாரா.
முதல் படத்திலேயே புகழ் உச்சிக்கு சென்ற இவர் இதையடுத்து சைவம், சித்திரையில் நிலா சோறு, விழித்திரு போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் இளம் பருவ நந்தினியாக பேபி சாரா நடித்திருந்தார்.
குழந்தை நட்சத்திரமாக நடித்த வந்த அனிகா தற்போது ஹீரோயினாக வலம் வருகிறார் அதே போல பேபி சாரா ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க போவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனால் அனிகாவிற்கு போட்டியாக பேபி சாரா இருப்பார் என்று ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.