அஜித்தின் மச்சினிச்சி பேபி ஷாமிலியா இது.. சொப்பன சுந்தரி அளவிற்கு இப்படி மாறிட்டாங்களே
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 1990ல் ரகுவரன், ரேவதி நடிப்பில் வெளியான படம் அஞ்சலி. இப்படத்தில் அஞ்சலியாக பேபி ஷாமிலி நடித்து தேசிய விருதி, தமிழ் நாடு திரைப்பட விருதினையும் பெற்றார். இப்படத்திற்கு பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்து வந்தார்.
இவருக்கு முன்பே இவரது அக்கா ஷாலினியும் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார். 10 ஆண்டுகளாக 2000 ஆம் ஆண்டுகள் வரை குட்டி நட்சத்திரமாக நடித்து 2009ல் தெலுங்கு மொழியில் வெளியான ஓய் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

ஷாலினி அஜித்குமார் திருமணத்திற்கு பின் அக்காவுக்கு பதில் நடிப்பில் ஆர்வம் காட்டி வீரசிவாஜி, அம்மன் மங்கரில்லு போன்ற படத்திலும் நடித்தார்.
இதன்பின் நடிப்பை விட்டு விட்ட் ஓவியக்கலையில் ஆர்வம் கொடுத்து ஓவியம் வரையவும் படிக்கவும் சென்று விட்டார்.
தற்போது 35 வயதாகும் ஷாமிலி இன்னும் திருமணம் செய்யாமல் வெளிநாடு பயணத்தில் இருந்து வருகிறார். சமீபத்தில் குட்டையான ஆடையணிந்து வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.