மூத்த மகன் திருமணத்தில் இப்படியொரு விஷயம் செய்யப்போகும் நெப்போலியன்!! பயில்வான் சொன்ன தகவல்..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக 90ஸ் காலக்கட்டத்தில் திகழ்ந்து வந்தவர் நடிகர் நெப்போலியன். சில ஆண்டுகளுக்கு முன் தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். உடல் நிலை சரியில்லாத அவரது மகனுக்காக அமெரிக்காவில் பல தொழில்களை ஆரம்பித்து நல்ல ஒரு தந்தையாக பெயர் எடுத்திருக்கிறார். சமீபத்தில் 25 வயதான மூத்த மகன் தனுஷிற்கு திருமணம் செய்ய நெப்போலியன் ஏற்பாடு செய்திருந்தார்.
நிச்சயம் நடக்கவுள்ளதால் முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழையும் நெப்போலியன் கொடுத்திருந்தார். சில தினங்களுக்கு முன் நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ்-க்கும் அக்ஷயா என்பவருக்கும் நிச்சயம் முடிந்துள்ளது.
நெப்போலியனின் வருங்கால மருமகள் திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த விவேகாந்தர் என்பவரின் மகள் என்று தெரியவந்துள்ளது. மகன் தனுஷ் வீடியோ காலில் இருக்க இரு குடும்பத்தினரும் நிச்சயதார்த்தத்தை முடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நெப்போலியன் தன் மகன் திருமணத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார். மணப்பென் திருநெல்வேலியை சேர்ந்தவர் என்பதால் மணமகள் வீட்டிற்கு வந்து தான் மணமகன் திருமணம் செய்ய வேண்டும்.
ஆனால் மணமகன் தனுஷ் அமெரிக்காவில் செட்டில் ஆகியிருப்பதாலும் அவரால் விமானத்தில் வரமுடியாது என்பதாலும் கப்பலில் வருவதற்கு சொகுசு கப்பலை புக் செய்து வரவழைக்க நெப்போலியன் திட்டமிட்டுள்ளார்.
ஆனாலும் திருமண தேதி இன்னும் முடிவு செய்யவில்லை என்பதால் மணமகளை அமெரிக்காவிற்கே கூட்டிச்சென்று அங்கேயே திருமணம் செய்வதற்கும் ஏற்பாடுகள் நெப்போலியன் செய்து வருவதாகவும் பயில்வான் தெரிவித்துள்ளார். எந்த கிசுகிசுவிலும் சிக்காத நெப்போலியன், எம் எல் ஏ-வாக இருந்து மத்திய அமைச்சராக தமிழ் நடிகர்களுக்கு பெருமை சேர்த்திருந்தார் என்றும் பயில்வான் தெரிவித்துள்ளார்.

