பக்தி சூப்பர் சிங்கர் Grand Finale!! யார் டைட்டில் வின்னர்? பிரமோ வீடியோ..
பக்தி சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 சீசன் நிறைவடைந்தவுடன் பக்தி சூப்பர் சிங்கர் ஆரம்பிக்கப்பட்டது. பல போட்டியாளர்கள் சிறப்பாக பாடி வரும் நிலையில் விரைவில் பக்தி சூப்பர் சிங்கர் நிறைவடையவிருக்கிறது.
வரும் வாரம் பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதற்கான ஹூட்டிங்கும் நிறைவடைந்த நிலையில் யார் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
யார் டைட்டில் வின்னர்
தற்போது கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் முதல் பிரமோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பலரும் ஷ்ரவன் தான் டைட்டிலை கைப்பற்றுவார் என்று கூறி வருகிறார்.
மேலும் முதல் ரன்னர் அப் அலைனாவும் 2வது ரன்னர் அப் கார்த்திக் மற்றும் பவித்ரா பிடித்துள்ளதாகவும் தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.