பக்தி சூப்பர் சிங்கர்!! பாடிய முதல் நாளே போட்டியாளருக்கு அடித்த ஜாக்பாட்..

Super Singer Vijay Television Tamil Singers Bakthi
By Jai May 28, 2025 10:35 AM GMT
Report

பக்தி சூப்பர் சிங்கர்

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சியில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். ஜூனியர், சீனியர் என்ற இரு பிரிவுகளில் தற்போது வரை நடைபெற்று வருகிறது.

பக்தி சூப்பர் சிங்கர்!! பாடிய முதல் நாளே போட்டியாளருக்கு அடித்த ஜாக்பாட்.. | Bakthi Super Singer Grand Launch Promo Video

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் பக்தி சூப்பர் சிங்கர் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பிக்கவுள்ளனர்.

தெய்வீகக்குரலுக்கான பிரம்மாண்ட தேடலின் ஆடிஷன் நிகழ்ச்சி தற்போது நடைபெற்றுள்ளது. புதிய தொகுப்பாளர்கள், புதிய நடுவர்களுடன் கூடி பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் பாடிய ஒரு ஆண் போட்டியாளரின் திறமையை பார்த்து நடுவரும் பாடகருமான டி எல் மஹாராஜன், நான் இசையமைக்கும் ஆல்பம் பாடலில் உனக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.