யாரும் கண்டுகொள்ளாமல் இறந்த இயக்குனர் ரவி! சூர்யா கூட பார்க்க வரவில்லை..

bala acharya-ravi
By Edward Dec 30, 2021 05:50 AM GMT
Report

முன்னணி இயக்குனராக இருப்பவர்களிடம் பலர் உதவி இயக்குனர்களாக பணியாற்றி சில படங்களையும் இயக்குவதுண்டு. அந்தவரிசையில் இயக்குனர் பாலாவிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆச்சார்யா ரவி.

பாலாவுடன் பணியாற்றும் போது பல பிரபலங்கள் பாலாவை பார்த்து பயப்படுவதால் நேரிடையாக அவரிடம் கூறாமல் உதவி இயக்குனராக பணியாற்றிய ரவியிடம் தான் எதுவாக இருந்தாலும் கூறுவார்களாம். பாலாவும் எது கூறினாலும் அவரிடம் சொன்ன பிறகுதான் நடிகர் நடிகைகளுக்கு தெரியப்படுத்துவாராம்.

சேது முதல் அவன் இவன் படம் வரை பாலாவிடம் இவர் உதவி இயக்குனராக இருந்துள்ளார். சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவர் மரணத்திற்கு அவருடன் பணியாற்றிய எந்த பிரபலங்களும் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லையாம்.

அதில் முக்கியமாக சூர்யா, விக்ரம் கூட இறங்கல் ஏதும் தெரிவிக்கவில்லையாம். ஷாஜகான் படத்தினை இவர் இயக்கவில்லையாம், வேறொரு ரவி பெயர் கொண்ட இயக்குனர் என்கிறார்கள் சினிமா வட்டாரங்கள்.