கண்டுகொள்ளாத மனைவி! பாசப்போராட்டத்தில் மகளை சந்தித்த இயக்குனர் பாலா.
நடிகை சமந்தா, தனுஷ், இமான் போன்ற நட்சத்திரங்களின் விவாகரத்து செய்தி அதிர்ச்சியை கொடுத்து அடங்காத நிலையில் இயக்குனர் பாலா - முத்துமலர் ஜோடியின் சட்டப்பூர்வமான விவாகரத்து செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. முன்னணி இயக்குனராக இருந்தாலும் மனதளவில் மகிழ்ச்சியாக இருந்தால் தான் படங்களின் வேலைகளில் கவனம் செலுத்த முடியும் அப்படி கடந்த 4 ஆண்டுகளாக அப்படியொரு நிலையில் இருந்து தற்போது மீண்டு இருக்கிறார் பாலா.
விவாகரத்துக்கு பல காரணங்கள் கூறினாலும் இருவரும் மகளை பற்றி யோசிக்கவில்லை. நட்சத்திரங்களானாலும் சரி சாதாரண தம்பதியர்களானாலும் சரி தங்களின் பிள்ளைகளை விவாகரத்து செய்யும் போது துளி அளவு கூட யோசிக்காமல் இருந்து விடுகிறார்கள். அப்படி த்தான் சமீபத்தில் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடியினர் செய்துள்ளனர்.
அதேபோல் பாலா தன் மகளின் பாசப்போராட்டத்தில் திகைத்து ஏங்கி வருகிறாராம். தமிழச்சி தங்கப்பாண்டியனின் மகள் திருமண விழாவிற்கு சென்று இருக்கிறார். அந்த விழாவில் பாலாவின் மனைவியும் தன் மகளை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்.
விழாவில் தன் அப்பாவை பார்த்த மகள் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று அப்பாவின் மடியில் உட்கார்ந்து அவரை கொஞ்சினாராம். மகளை பார்த்த சந்தோஷத்தில் பாலாவும் தன் மகளிடம் ஆசையாக பேசினாராம். அவருடைய மகளும் பாலாவின் தலையில் செல்லமாக தட்டுவதும், சேட்டை செய்வதும் என்று தன் பாசத்தை அப்பாவிடம் காட்டி இருக்கிறார்.
இப்படி இருவரும் பாச பிணைப்பில் இருக்க பாலாவின் மனைவி முத்து மலரும் அந்த விழாவில் எதையும் கண்டுக்கொள்ளாமல் அவர் வேலை பார்த்து வந்தார். பின் பாலா கண்ணீர்மல்க அந்த இடத்தில் இருந்து மகளிடம் பேசிவிட்டு சென்றுள்ளார்.