தேவையில்லாதவன் ஆகிட்டேன்!! குஷ்பூ மகள் கல்யாணத்துக்கு போகாத காரணம்!! ராதா ரவி..

Sundar C Radhika Sarathkumar Marriage Kushboo Radha Ravi
By Jai Jul 01, 2026 01:00 PM GMT
Report

அவந்திகாவின் திருமணம்

இயக்குநர் சுந்தர் சி - குஷ்பூ தம்பதியினரின் மகள் அவந்திகாவின் திருமணம் கோவாவில் கடந்த வாரம் விமரிசையாக நடந்து முடிந்தது. தென்னிந்திய சினிமாவை சேர்ந்த பலரும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமணத்தில் மூத்த நடிகர் ராதா ரவி மட்டும் செல்லாதது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இதுகுறித்து ராதா ரவி தன்னுடைய விளக்கத்தை கூறியிருக்கிறார்.

தேவையில்லாதவன் ஆகிட்டேன்!! குஷ்பூ மகள் கல்யாணத்துக்கு போகாத காரணம்!! ராதா ரவி.. | Radha Ravi Why He Skipped Kushboo Daughter Wedding

அதில், என்னை யாரும் அழைக்கவே இல்லை, அழைத்திருந்தால் நிச்சயமாக கோவாவுக்கு போயிருப்பேன், அழைப்பு வராததால் தான் நான் போகவில்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும், குஷ்பூ அரசியலில் இருந்தபோது தேர்தலில் போட்டியிட்டார், அப்போது என் வீட்டுக்கே சுந்தர் சியுடன் வந்து ஆதரவு கேட்டார். நான் என் ஏரியாவில் இருந்தவர்களை எல்லாம் அழைத்து அவருக்காக பேசினேன்.

பின் சுந்தர் சி தேர்தலில் போட்டியிட்டபோதும் அவருக்கு வாழ்த்து அனுப்பினேன், அதனால் மகள் கல்யாணத்திற்கு நிச்சயம் அழைப்பார்கள் என்று நினைத்தேன், ஆனால் அழைக்கவில்லை.

தேவையில்லாதவன் ஆகிட்டேன்!! குஷ்பூ மகள் கல்யாணத்துக்கு போகாத காரணம்!! ராதா ரவி.. | Radha Ravi Why He Skipped Kushboo Daughter Wedding

தேவையில்லாதன்

ஒரு காலத்தில் நான் அவர்களுக்கு தேவைப்பட்டேன், இப்போது தேவையில்லாத ஆளாகிவிட்டேன் போல, என்னைவிட சம்பந்தமே இல்லாத பலரை திருமணத்திற்கு அழைத்திருந்தார்கள். அதையெல்லாம் நான் கவனிக்காமல் இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய ராதா ரவி, ஒருமுறை ஒகேனக்கல் அருகே நடந்த ஷூட்டிங் முடிந்து அனைவரும் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது கடுமையான காற்று வீசியதால் குஷ்பூ பயந்துவிட்டார். உடனே தன்னுடைய காரில் அவரை ஏற்றி பாதுகாப்பாக தர்மபுரி வரை அழைத்து சென்றேன்.

தேவையில்லாதவன் ஆகிட்டேன்!! குஷ்பூ மகள் கல்யாணத்துக்கு போகாத காரணம்!! ராதா ரவி.. | Radha Ravi Why He Skipped Kushboo Daughter Wedding

அதேபோல், பாண்டித்துரை படத்தின்போது குஷ்பூ திடீரென மயங்கி விழுந்தபோது அருகிலிருந்தவர்கள் தயங்கினர். ஆனால் அவரை நானே தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினேன். இந்த இரு சம்வத்தையும் அவர் மறந்துவிட்டார் போல, ஏன் அழைக்கவில்லை என்று குஷ்பூவிடம் தான் கேட்க வேண்டும் என்று ராதா ரவி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.