நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.. பயில்வான் ரங்கநாதனை பங்கமாக கலாய்த்த இயக்குனர் பாலா..

director bala troll pisasu fun video troll video bayilwan ranganathan
By Kathick Dec 07, 2021 01:30 PM GMT
Kathick

Kathick

Report

திரையுலகில் நடிகராகவும், பத்திரிகையாளராகவும் பிரபலமானவர் பயில்வான் ரங்கநாதன். முதலில் பத்திரிகையாளராக இருந்த இவர், பின்னர் திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும், சண்டை காட்சிகளில் நடிக்க துவங்கினார். தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும், இதுவரை பத்திரிகையாளராகவே இருக்கிறார்.

அவ்வப்போது நேர்காணலில் இவர் பேசு, கிசுகிசுக்கள் மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்கள், இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படும். குறிப்பாக நடிகர், நடிகைகளின் பெர்சனல் வாழ்க்கையை குறித்து, இவர் பேசும் விதம், சமூக வலைத்தளத்தில் பெரிதளவில் சர்ச்சைகளை உண்டாகியுள்ளது.

இதில் தான், பயில்வான் ரங்கநாதன் இப்படி என்று பார்த்தால், சினிமா பிரபலங்களின் பிரஸ் மீட் போதும் சர்ச்சைக்குரிய விதத்தில் தான் கேள்விகளை கேட்கிறார். அப்படி ஒரு முறை பிசாசு படத்தின் பிரஸ் மீட்டில், அப்படத்தின் தயாரிப்பாளரும், திரையுலக இயக்குனருமான பாலாவிடம், சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி கேட்டார்.

அது என்னவென்றால், 'பிசாசு என டைட்டில் வைத்து படம் தயாரித்துள்ளீர்கள். அதனால் தான் கருப்பு நிற உடையணிந்து இருக்குறீர்களா..? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பாலா, ' பிசாசு என்றால், என்ன போல் கருப்பு நிறத்தில் உடை அணிந்திரவேண்டும் என்று அவசியமில்லை, உங்களை போல் பிங்க் நிறத்திலும் உடை அணிந்திருக்கலாம்' என்று பங்கமாக பயில்வான் ரங்கநாதனை கலாய்த்தார் பாலா. இதோ அந்த வீடியோ.. நீங்களே பாருங்க..