மேடையிலேயே பயில்வானை அசிங்கப்படுத்திய இயக்குனர் பாலா.. இந்த அவமானம் தேவைதானா?
சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அவதூறாக பேசி வருகிறார் என்று பல சர்ச்சையில் சிக்கி மாட்டிகொள்பவர் பயில்வான் ரங்கநாதன்.
பத்திரிக்கை துறையில் இருந்தும் நடிகராகவும் இருந்து சினிமா நட்சத்திரங்களை இப்படி கேவலமாக சித்தரித்து பேசி வருவதை கே ராஜன், ரேகா நாயர் உள்ளிட்ட பல புகாரளித்து நேரடியாக திட்டியும் வருகிறார்கள். ஒரு சமயத்தில் நடிகை ராதிகா சரத்குமாரும் கூட செருப்பால் அடித்தார் என்ற செய்தியும் வெளியாகியது.
அதேபோல் இரவின் நிழலில் நிர்வாணமாக நடித்த ரேகா நாயரை படுகேவலப்படுத்தி பேசியதால் கடற்கரைக்கு சென்று நடைபெயற்சி செய்த பயில்வானை கண்டபடி திட்டித்தீர்த்தார்.
இதற்கு முன்பிருந்தே பல நட்சத்திரங்களிடம் பல்பு வாங்க் அசிங்கப்பட்டும் இருக்கிறார் பயில்வான். அந்தவகையில் பிசாசு படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அப்படத்தில் தயாரிப்பாளராக இருந்த பாலாவிடம் வாய்க்கொடுத்து அசிங்கப்பட்டுள்ளார்.
பிசாசு-ன்னு தலைப்பு இருக்கு நீங்கதான் முதல் தயாரிப்பாளரு, முதல் தயாரிப்பாளரு, அதனால் தான் கருப்பு கருப்புன்னு இருக்கீங்களா என்று கேட்டுள்ளார் பயில்வான்.
அதற்கு பாலா அவர்கள், பிசாசு-ன்னா கருப்புல தான் இருக்கனுமா பிங்க் கலர்ல சட்டை போட்டு வரலாம்ல என்று பயில்வான் போட்டிருந்த பிங்க் சட்டையை வைத்து கிண்டல் செய்துள்ளார். வாய்க்கொடுத்த இப்படி அசிங்கப்பட்டுட்டாரே என்று நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.
Once Upon A Time.....Bala Mama Version ? pic.twitter.com/kf6xCtSTyK
— Rocky Bhai (@RockybhaiOffcl) July 29, 2022
இதற்காக தான் இயக்குனர் பாலா மற்றும் அவரது முன்னாள் மனைவி பற்றி அவதூறாக பேசியிருந்தார். அவர்களின் விவாகரத்துக்கு பல காரணங்களை வதந்திகளாக பரப்பி பலரிடம் திட்டும் வாங்கியிருக்கிறார்.