60 வயது நடிகரை வெச்சி செய்யும் தமிழ் ரசிகர்கள்! அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

tollywood oscar balakrishnan arrahman balaiya
By Edward Jul 23, 2021 07:30 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராகவும் மூத்த நடிகராகவும் திகழ்ந்து வருபவர் பாலகிருஷ்ணா என்கிற பாலய்யா. இவர் படங்கள் பெரும்பாலும் ஆக்‌ஷன் காட்சிகள் காமெடித்தனமாக ஏற்க முடியாத அளவிற்கு இருக்கும். அப்படி இருந்தும் தெலுங்கு ரசிகர்கள் அவரின் படங்களை கொடிக்கட்டி பறக்கவிடுவார்கள்.

தமிழ் ரசிகர்களுக்கு அவர் பெரும் பலான கிருஷ்ணாவாகத்தான் தெரிகிறாராம். அந்தவகையில் நடிகர் பாலகிருஷ்ணன் படத்தில் நடிக்க நடிகைகள் போட்டிபோடுவதும் வழக்கமாம். தற்போது அவர் பற்றிய விஷயம் பெரியளவில் கசிந்துள்ளது. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஏ ஆர் ரகுமான் ஆஸ்கார் விருது வாங்கி இருக்கலாம் ஆனால் அவர் யார் என்று எனக்கு தெரியாது.

மேலும், அவர் வாங்கிய ஆஸ்கார் விருதிற்கு இணையாக என். டி. ஆரின் கால் விரலுக்கு சமம் என்று கூறியுள்ளார். எந்த விருதும் தன்னுடைய குடும்பம் தெலுங்கு சினிமாவிற்கு ஆற்றிய நன்மைக்கு ஈடாகாது என்று சர்ச்சையாக பேசியுள்ளார். இப்படி உலகத்தை தன் இசையால் இரு விருதுகளை பெற்று உயர்ந்த ஏ ஆர் ரகுமானை பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியும், ரசிகர்களின் #Whoisbalakrishna டிரெண்டிங்கில் கேலிகளை சந்தித்துள்ளது.