இந்த வயசுல பொண்ணு கேட்குதான்னு தப்பா பேசுனாங்க!! பாலு மகேந்திராவின் மகள் கண்ணீர்..
தமிழ் சினிமாவில் 80-களில் லிஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. முன்னணி நடிகர்களை உயரத்தில் கொண்டு சென்று பார்த்தவர் தான் அவர். மூன்று திருமணங்களை செய்து கொண்டார் பாலு மகேந்திரா. 963ல் அகிலேஷ்வரி என்பவரை திருமணம் செய்த பாலு மகேந்திரா ஷோபாவிடம் ரகசியமாக உறவில் இருந்தார். இதன்பின் அகிலேஷ்வரி பாலு மகேந்திராவை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன்பின் 1978ல் ஷோபாவை திருமணம் செய்தார். திருமணமான இரண்டு வருடத்தில் ஷோபா தற்கொலை செய்து மறைந்தார்.
18 ஆண்டுகள் தனியாக இருந்த பாலு மகேந்திரா 1998ல் மவுனிக்காவை திருமணம் செய்து கொண்டார். 2014ல் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இந்நிலையில் பாலு மகேந்திரா தத்தெடுத்த வளர்த்த மகள் சக்தி மகேந்திரா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பல விசயங்களை கூறி மனம் உருகி பேசியிருக்கிறார். சினிமாவில் எனக்கு ஆர்வம் இருந்தது. உறவினர் ஒருவர் தான் அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார்கள். அவரை எனக்கு முன்பு யார் என்று தெரியாது, சினிமா பற்றியும் தெரியாது.
அவரை பார்க்க சென்ற போது மகளே உள்ளே வா என்று தான் கூப்பிட்டார். நானும் அம்மா மட்டும் தான் போனோம். நடிப்பில் ஆர்வம் இருக்கு என்று சொல்லியதும் என்னை போட்டோ எடுத்து அனுப்பி வைத்துவிட்டு, அடுத்த வாரம் கூப்பிட்டார்கள். சனிக்கிழமை சென்றது என் அம்மாவிடம், எனக்கு பெண் குழந்தை கிடையாது, பொண்ணு வளர்க்கணும் என்று ஆசை, இவங்கள பொண்ணாக பார்த்துக் கொள்ளட்டுமா என்று கேட்டார். 2010 இறுதி முதல் அவர் இறக்கும் வரை நான் அவர்களுடன் இருந்தேன்.
அப்போது எனக்கு 11 வயது தான் இருக்கும், அப்போது எனக்கு எதுவும் தெரியாது. என் அப்பா இறந்து சில மாதத்தில் அவர் என்மீது பாசமாக இருந்தது எமோஷ்னலாக இருந்தது அதனால் அவரை ஏற்றுக்கொண்டேன். என்னை அவர் தாங்கி தாங்கி பார்த்துக்கொண்டார் என்றும் நான் இப்படி இருக்கேன் என்றால் அதற்கு எல்லாமே அவர் சொல்லிக் கொடுத்ததுனால் தான். நான் இத்தனை வருடம் மறைக்கவும் இப்போது நான் தான் மகள் என்று சொல்ல எந்த காரணமும் இல்லை.
இந்த வயசுல ஒரு பொண்ணு கேட்குதான்னு எல்லாமே தப்பாதான் பேசுனாங்க, எனக்கும் அது தெரியும், அவருக்கும் தெரியும். எங்களது ரிலேஷன்ஷிப்பை யாருக்கும் புரியவைக்கணும் என்று அவசியம் இல்லை. என் பெயர் நல்லதாக இருந்தால் வெளியில் சொல், தப்பாக இருந்தால் சொல்லாதே என்று அவரே என்னிடம் சொன்னதாக சக்தி மகேந்திரா கூறியிருக்கிறார்.
You May Like This Video