கோபத்தில் இசைஞானி கேட்ட ஒரு வார்த்தை!! பாலுமகேந்திரா பதிலால் வாயடைத்து போன இளையராஜா..
இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் மூடுபனி படம் 1980ல் உருவாகி இசைஞானி இளையராஜா இசையில் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதிலும் இசைஞானியின் சையில் என் இனிய பொன்நிலாவே பாடல் இன்றுவரை யாராலும் மறக்கமுடியாத பாடலாக அமைந்துள்ளது. பெரும்பாலும் இசைஞானி இசையில் உருவாகும் பாடல்கள் தான் சொல்லும் கருத்துக்களை போல் அமைத்துவிடுவது வழக்கம்.
ஆனால் பாலுமகேந்திரா, பின்னணி இசையில் இந்தந்த இடங்களில் இப்படியிப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று இசைஞானியிடம் கூறுவாராம். அவர் கூறியதால் சற்று இளையராஜாவுக்கு பிடிக்காமல் போக தன்னை கட்டுப்படுத்துவது போல் இசைஞானி உணர்வதை புரிந்து கொண்டுள்ளார் பாலுமகேந்திரா. படத்தின் இசையை தீர்ப்பானிப்பது யார் என்று மீண்டும் மீண்டும் பாலுமகேந்திராவிடம் இசைஞானி கோபமாக கேட்டிருக்கிறார். அதற்கு ஒரு விளக்கத்தை கூறி இளையராஜாவை வாயடைக்க வைத்ததோடு நெகிழவும் வைத்திருக்கிறார் மகேந்திரா.
ஒரு நதி ஆரம்பிக்கும் இடத்தினை ’நதி மூலம்’ என்கிறார்கள். அதன் தொடக்கம் முதல் கடலில் கலக்கும் வரை எப்படி எல்லாம் செல்கிறது என்று யோசித்து பாருங்களேன். சிறிய ஊற்றாக ஆரம்பித்து போகபோக சற்றுத்தள்ளி அருவியாகவும், பின் சிற்றருவி கலக்க, காட்டருவியாக மாறும். பின் அதன் தோற்றம் வேகமெடுக்க மாற்றத்தை பார்க்க முடியும். பின் ஒரு பெரிய பாறையில் இருந்து பேரழகு தோன்றி இரைச்சலுடன் நீர்வீழ்ச்சியாக கொட்டி காட்சியளிக்கும்.
வேறொரு இடத்திற்கு சென்று பரந்த நீர்த்தேக்கமாகி, அதிக ஆழத்துடன் அமைதியாக காட்சி அளித்து கூழாங்கற்களுடன் உரசியபடி வழிந்து ஓடும். சிலுசிலு என்ற சம்பம் நன் மனடை அள்ள, பின் சில இடங்களில் பாயும் போது நிலத்தடி நீராகிவிடும். இதுபோல் ஆரம்பம் முதல் கடைசி வரை உருவாறும் அனைத்தையும் தீர்மானிப்பது நிலத்தின் அமைப்பு தானே என்று கூறியிருக்கிறார்.
அது போல தான் ஒரு படத்தின் இசையும். பின்னணி இசையை தீர்ப்பாது திரைக்கதை தான். இசையை மட்டுமல்ல, ஒளிப்பதிவு, நடிப்பு, படத்தொகுப்பு அனைத்தையும் திரைக்கதை தீர்மானிக்கிறது என்று பாலுமகேந்திரா கூறியதும் வாயடைத்து போய் எழுந்து நின்று கைத்தட்டி இருக்கிறார் இசைஞானி இளையராஜா.