BanIPL என்ற ஹாஷ்டேக்-ஐ பகிர்ந்து சமூக வலைதளங்களில் கொந்தளிக்கும் ரசிகர்கள்! என்ன காரணம் தெரியுமா?
IPL ஆட்டங்கள் முடிந்த கையுடன் T20 உலகக்கோப்பைக்கான போட்டிகள் துபாய்-ல் துடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் குரூப் பி பிரிவில் இருக்கும் இந்தியா லீக் ஆட்டத்தில் இதுவரை தோற்று போகாமல் இருந்த பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நிலையில் நேற்றைய ஆட்டத்தை நியூ சிலாந்திற்கு எதிராக ஆடியது. டாஸ் வென்ற நியூ சிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்து 20 ஓவர்களில் 110 ரன்களுடன் இந்தியாவை புரட்டியெடுத்தது.
அடுத்தடுத்து ஆட்டமிழந்த இந்தியவீரர்கள் ஏமாற்றத்துடன் அடுத்த இன்னிங்க்ஸை நோக்கி சென்றனர். ஆனால் 14-ஏ ஓவர்களில் 110 ரன்களை குவித்து அதிரடியாக ஜெயித்தது நியூ சிலாந்து அணி.
இந்த தோல்வியால் இந்திய அணியின் அரையிறுதி கனவு கேள்விக்குறியாகியுள்ளது. இது இந்திய ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவர்கள் இணையத்தில் BanIPL என்ற ஹாஷ்டேக்-ஐ பகிர்ந்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
#BanIPL is trending in #India ????? pic.twitter.com/nuXxtQsDHC
— Iqra Nasir (@IamIqraNasir) October 31, 2021