ஆடம்பர வாழ்க்கை எல்லாம் விட்டுவிட்டு மலையில் வசிக்கும் பிரபல நடிகை!! யார் தெரியுமா?
சினிமாத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த ஒரு நடிகை, ஐஸ்வர்யா ராய், மாதுரி தீட்சித் உள்ளிட்ட நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வந்தார். அப்படி சினிமா வாழ்க்கை நல்ல நிலையில் இருந்தபோது சினிமாத்துறையில் இருந்து தன்னை தூர விலக்கிக்கொண்டார்.
ஒரு காலத்தில் சிறந்த ஹீரோயினாக இருந்தவர், கோடிக்கணக்கான சொத்துக்களையும் ஆடம்பர வாழ்க்கையையும் விட்டுவிட்டு இப்போது மலைகளில் வசித்து வருகிறார். சமீபத்தில் வெளியான அவரது புகைப்படங்கள் தற்போது வைரலாகியும் வந்தது.
பர்கா மதன்
அந்த நடிகை தான் பர்கா மதன். திரைப்படத்துறையை விட்டு தற்போது துறவியாக மாறியுள்ளார். 1996ல் அக்சய் குமாருடன் கிலாடியோம் கா கிலாடி படத்தில் அறிமுகமாகிய பர்கா மதன்.
2003 வெளியான பூத் படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புனையாக அமைந்தது. திரைப்படங்கள் தவிர தொலைக்காட்சி சீரியல்களிலும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.
இருந்தபோதிலும் கரியரின் உச்சத்தில் இருந்தபோது 2012ல் துறவியாக வேண்டும் என்று முடிவெடுத்து அனைவருக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆடம்பரமான வாழ்க்கை எல்லாம் விட்டுவிட்டு மலைகள் மற்றும் ஆறுகளின் கரையில் தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.