விளக்கு பிடிச்சத நீங்க பாத்தீங்களா! தயாரிப்பாளருடன் மல்லுக்கட்டிய நடிகர்..

controversy bayilvanranganathan krajan
By Edward Feb 17, 2022 12:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகராகவும் பத்திரிக்கையாளராக பணியாற்றி பிரபலமானவர் பயில்வான் ரங்கநாதன். சமீபகாலமாக சினிமா நட்சத்திரங்கள் பற்றிய அந்தரங்க விஷயங்களை ஓப்பனாக ஒளிவுமறைவின்றி யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

இதற்கு பலர் கடுமையாக விமர்சித்து வந்துள்ளனர். அதில் தயாரிப்பாளர் ராஜன் அவர்கள் பயில்வானை கண்டபடி பேசியுள்ளார். இதற்கு ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன். நான் பல பத்திரிக்கையில் பணியாற்றியவன்.

ஆனால் நீங்கள் அரசியல், பள்ளி நிறுவனத்தை நடத்தியும் அதில் வந்த காசில் தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்தீர்கள். அதனால் படு தோல்வியடைந்து நஷ்டத்தை சந்தித்தீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

கால்ஷீட் கொடுக்காத நடிகைகளை கண்டபடி விமர்சித்து வருகிறீர்கள் என்றும் நான் எங்கு சென்று விளக்கு பிடித்தேன் என்று என்னை விமர்சிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.