சிம்புவுக்கு ஐஸ்வர்யாவுக்கு இருந்தது குப்பை காதல்!! மகன்களுக்காக சேரப்போகும் ஐஸ்வர்யா - தனுஷ்! பிரபல நடிகர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து தற்போது ஹாலிவுட் வரை சென்று கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகர் தனுஷ். கடந்த ஆண்டு 2022 ஜனவரி 17 ஆம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிவதாக கூறி அறிக்கை வெளியிட்டார்.
இருவரும் என்ன காரணத்திற்காக பிரிந்தனர் என்று பலவிதமான செய்திகள் வெளியானது. மனைவியை பிரிவதற்கு முன் ரஜினிகாந்த் முன்னிலையில் போயஸ் கார்டனில் பல கோடி மதிப்பில் நிலம் ஒன்றினை வாங்கி பூஜை போட்டிருந்தார்.
2 ஆண்டுகள் கழித்து மனைவியை பிரிந்த நிலையில் 150 கோடி செலவில் உருவாகிய அந்த பங்களா வீட்டிற்கு குடும்பத்துடன் குடியேறியிருக்கிறார்.
இப்படியிருக்கும் போது இருவரும் எப்படியாவது சேர்ந்துவிடுவார்கள் என்று இரு வீட்டாரும் மற்றும் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் எதிர்ப்பார்ப்போடு இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், ஆரம்பத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா - தனுஷ் திருமணம் குறித்து பேசினார்.
இதற்கு நீங்கள் தான் காரணம், நீங்கள் தான் பத்திரிக்கையில் எழுதுனீர்கள், இது பற்றி கஸ்தூரி ராஜாவிடம் கேட்டு சம்மதம் சொன்னதால் திருமணத்திற்கு ஓகே சொன்னேன். அதனால் செய்தியை உண்மையாக்கிவிட்டேன் என்று ரஜினிகாந்த் பயில்வானிடம் கூறினார்.
அதன்பின் ஐஸ்வர்யா சிம்புவை காதலித்தது பற்றி கேட்டதற்கு, ஐஸ்வர்யா , சிம்புவை காதலித்ததாகவும் அதன்பின் வேறொரு தொழிலதிபரின் மகனை காதலித்ததாகவும் அதன்பின் அவர் தூக்குபோட்டு செத்துப்போய்டார் என்றும் கூறினார்கள்.
அதெல்லாம் புதைந்து போன குப்பை அதை எல்லாம் கிளரவேண்டாம் இப்போது என கூறியிருக்கிறார் பயில்வான்.
ரஜினிகாந்த் மகளுக்கு அறிவுரை கூறினார். மற்றபடி இருவரும் நோட்டீஸ் எதுவும் அனுப்பவில்லை. மகன்களுக்காக இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என தெரிவித்துள்ளார்.