மகன் வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகர்.. பாக்யராஜ் கொடுத்த டார்ச்சரால் இயக்குனர் சசிகுமார் செய்த காரியம்..
தமிழ் சினிமாவில் எதார்த்தமாக கதை, திரைக்கதை, வசனம் கச்சிதமாக அமையும் படி படங்களை எடுத்து சூப்பர் ஹிட் கொடுத்து வந்தவர் கே பாக்யராஜ். நடிகராகவும், இயக்குனராகவும், வசனக்கர்த்தாவாகவும், மியூசிக் கம்போசராகவும் திகழ்ந்து ஜொலித்தவர் பாக்யராஜ்.
சாந்தனுக்கு வந்த வாய்ப்பு
அந்தவகையில் தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பாக்யராஜ பூரணியை காதலித்து திருமணம் செய்து சாந்தனு, சரண்யா என்ற இரு பிள்ளைகளை பெற்று சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

சரண்யா காதல் தோல்வி காரணமாக சினிமாவைவிட்டும் வெளியுலகத்தில் இருந்தும் விலகி இருந்து வருகிறார். அவருக்கு அடுத்து சாந்தனுவும் தற்போது ஒருசில படங்களில் முக்கிய ரோலிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சாந்தனுவுக்காக பாக்யராஜ் சசிகுமாரிடம் செய்த ஒரு செயலை பயில்வான் ரங்கநாதன் நினைவு கூர்த்திருக்கிறார்.
சசிகுமார் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் வெளியான படம் சுப்ரமணியபுரம். மிகப்பெரிய வெற்றியை கொடுத்து ஜெய்க்கு திருப்புமுனையாக அமைந்த படமாக இருந்தது. ஜெய்க்கு முன் அப்படத்தில் முதலில் சாந்தனு தான் நடிக்கவிருந்தாராம்.
கெடுத்துவிட்ட பாக்யராஜ்
பாக்யராஜிடம் கதை கூறி மகன் நடிக்க வைக்க திட்டமிட்ட நிலையில் கதையில் இதை மாற்றுங்கள் அதை எடுத்துவிடுங்கள் என்று கூறியிருக்கிறார் பாக்யராஜ். இது என் கதை நான் நினைத்தது போல் படத்தை எடுக்க ஆசைப்படுகிறேன் என்று கூறிவிட்டாராம் சசிகுமார்.
அதன்பின் சாந்தனுவை தூக்கிவிட்டு ஜெய்யை நடிக்க வைத்து பல விருதுகளை தட்டித்தூக்கி இருக்கிறார் சசிகுமார்.