சோனியா அகர்வாலை விவாகரத்து செய்ய காரணமே கஸ்தூரி ராஜா தான்!! வெளியான உண்மை காரணம்..

Sonia Agarwal Selvaraghavan Kasthuri Raja Gossip Today
By Edward Jun 30, 2023 12:48 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வந்தவர் கஸ்தூரி ராஜா. தன் இரு மகன்களாக செல்வராகவன், தனுஷை சினிமாவில் அறிமுகப்படுத்தி மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு வந்துள்ளார். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இருவரையும் அறிமுகப்படுத்தி கொண்டாடி வருகிறார் கஸ்தூரி ராஜா.

சினிமாவில் கொடிக்கட்டி பறந்த இரு மகன்களின் முதல் திருமண வாழ்க்கை கசப்பானதாக அமைந்துள்ளது. சமீபத்தில் தான் தனுஷு, ஐஸ்வர்யாவை பிரிந்தார். இதற்கு முன் செல்வராகவன், நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்தார்.

திருமணம் செய்த சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சோனியா அகர்வாலை விவகரத்து செய்து இரண்டாம் திருமணத்தை செய்தார். சோனியா அகர்வாலை விவாகரத்து செய்ய என்ன காரணம் என்று பலர் கூறி வந்து வருகிறார்கள்.

அப்படி அவர்களின் விவாகரத்து காரணம் கஸ்தூரி ராஜாவின் கண்டிப்பு தான் காரணமாம். சோனியா அகர்வாலுக்கு திருமணத்திற்கு முன்பே குடிப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் இருந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் சோனியா அகர்வால் இது போன்று நடந்து கொண்டதால் கஸ்தூரிராஜா கண்டித்துள்ளார்.

இந்த விஷயத்தால் தான் செல்வராகவன் சோனியா அகர்வால் இடையே விவாகரத்து நடந்தது என்று பேட்டி ஒன்றில் பயில்வான் கூறியுள்ளார்.