விஜய்யின் காதல், கல்யாணம், விவாகரத்து சம்பவம்? உண்மையை கூறி முற்றுப்புள்ளி வைத்த பயில்வான்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வந்தாலும் இடையில் பல சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார். அந்தவகையில் விஜய்யின் ஆரம்பகாலத்தில் இருந்து தற்போது விவாகரத்து வதந்திகள் வரை புட்டுப்புட்டு வைத்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
சங்கவி, திரிஷா, கீர்த்தி சுரேஷ் காதல்
ஆரம்பத்தில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜய்யுடன் நடிகை சங்கவி நடிக்க ஆரம்பித்தார். இருவருக்கும் ஆரம்பத்திலேயே காதல் கிசுகிசு பரவியதால் எஸ் ஏ சந்திரசேகர் அதன்பின் இருவரையும் இணைந்து நடிக்க மாட்டார் என்று அறிவித்தார். அடுத்து, நடிகை திரிஷாவுடன் தொடர்ந்து நடித்து காதல் கிசுகிசுக்களில் சிக்கினார்கள்.

அதனால் 17 ஆண்டுகளாக விஜய்யுடன் திரிஷாவை நடிக்கவிடாமல் தடுத்தார் மனைவி சங்கீதா. தற்போது மீண்டும் திரிஷா, லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கும் கீர்த்தி சுரேஷுக்கும் விரைவில் திருமணம் என்று வதந்தி பரவியது. இதற்கு கீர்த்தி சுரேஷ் அம்மா விளக்கம் அளித்தும் இனிமேல் இருவரும் ஜோடியாக நடிக்கமாட்டார்கள் என்ற தகவலும் வெளியானது என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.
இதுதான் உண்மை
சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து அவரின் அனுமதியுடன் ஆலோசனையின் பெயரில் தான் திரிஷா நடித்து வருகிறார். கணவரை விட்டுக்கொடுக்காத சங்கீதா, காசுவாங்கிய சிலர் விஜய்க்கு விவாகரத்து என்று செய்திகளை பரப்பி வருகிறார்கள். நானும் பல விசயங்களை கூறி வருகிறேன், இது வெறும் பொய் தான் என்றும் இதை பல மீடியாக்கள் பரப்பி வருகிறாரகள்.
விஜய்க்கு எதிரிகள் சிலர் ஏன் இப்படி செய்கிறார்கள் என்ன என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளார் பயில்வான். விஜய் நிச்சயமாக குடும்பத்தை விட்டு பிரியமாட்டார், நல்ல தந்தையாக மகனுக்கும் மகளுக்கும் இருப்பார் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.