2 மணி நேரத்துக்கு 12 லட்சமா!! மீனாவின் டாப் சீக்ரெட்டை உடைத்த பயில்வான்

Rajinikanth Meena Tamil Actress
By Edward May 20, 2023 11:45 AM GMT
Report

1982ல் வெளியான நெஞ்சங்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நடிகை மீனா. அதன்பின் ரஜினிகாந்த் உட்பட முன்னணி நடிகர்கள் படத்தில் குட்டி நட்சத்திரமாக நடித்து வந்த மீனா, ரஜினியுடன் ஜோடியாக நடித்து சிறு வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமாகினார்.

சமீபத்தில் சினிமாவில் அறிமுகமாகி 40 ஆண்டுகள் பயணித்ததை கொண்டாடி ஒரு நிகழ்ச்சியையும் பிரபல ஊடகம் நடத்தியது.

2 மணி நேரத்துக்கு 12 லட்சமா!! மீனாவின் டாப் சீக்ரெட்டை உடைத்த பயில்வான் | Bayilvan Opens Up About Actress Meena40 Salary

கணவர் வித்யாசாகர் மறைவுக்கு பின் மீண்டும் பழைய நிலைக்கு மாறிய மீனாவிற்கு இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது. மீனா 40 நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த், பிரபுதேவா, பாக்யராஜ், ராஜ்கிரண், ரோஜா, குஷ்பூ, ராதிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மீனாவை பற்றி புகழ்ந்து பேசினர்.

இந்நிலையில் மீனா இந்நிகழ்ச்சிக்கு எப்படி ஒப்புக்கொண்டார் என்றும் அதற்காக அவர் வாங்கிய தொகை எவ்வளவு என்ற விசயத்தை பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். இந்நிகழ்ச்சியில் மீனா கலந்து கொள்ள மறுத்துவிட்டதாகவும் அதன்பின் விடாமல் யூடியூப் சேனல் கேட்டுக்கொண்டே இருந்துள்ளனர்.

அப்படி இரவு 8 மணி முதல் 10 மணி வரைதான் நிகழ்ச்சியை நடத்த இருப்பதாகவும் அதற்காக உங்களுக்கு 13 லட்சம் சம்பள தொகையாக கொடுக்கிறோம் என்று கூறியதால் தான் அதற்கு மீனா ஒப்புக்கொண்டுடார் என்றும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அதனால் தான் நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்தை மிகப்பெரிய ரீச் கிடைக்கும் என்று அழைத்திருக்கிறார்கள்.

Gallery