குஷ்பு - அர்ஜுன் இடையே இருந்த தொடர்பு, இரவு நேரத்தில்.. ரகசியத்தை உடைத்த பயில்வான் ரங்கநாதன்..
நடிகை குஷ்பூ பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், முதன் முறையாக ஹீரோயினாக அறிமுகமானது அர்ஜுனின் பிரேமக்னி என்ற படத்தின் மூலம் தான்.
இப்படத்திற்கு பின்னர் குஷ்புவின் மார்க்கெட் கிடுகிடுவென எகிரியது. ஆனால் அர்ஜுனுக்கு அப்படி இல்லை அவர் நடித்த படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து. இந்த காரணத்தால் அர்ஜுனை வைத்து படத்தை இயக்க எந்த இயக்குனரும் முன் வரவில்லை.
அதனால் அவர் தானே படத்தை இயக்கலாம் என்ற எண்ணத்தில் பல தயாரிப்பாளர்களை அணுகியுள்ளார். ஆனால் அர்ஜுனுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது.
நடிகை குஷ்புவின் மார்க்கெட் தற்போது உச்சத்தில் இருக்கிறது. அவரை இந்த படத்தில் நீங்கள் ஹீரோயின் ஆக்கினால் நான் படத்திற்கு பைனான்ஸ் செய்கிறேன் என்று ஒரு பைனான்சியர் கூறியுள்ளார்.
இதை கேட்ட அர்ஜுன், ஒரு விதமான தயக்கத்துடன் குஷ்பூவிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார். அந்த சமயத்தில் குஷ்பூ கால் சீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருந்தார். ஆனால் குஷ்பு அர்ஜுனுக்காக படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார்.
குஷ்பூ பகல் நேரங்களில் மட்டும் வேறு படங்களில் நடித்துவிட்டு, இரவு ஓய்வு கூட எடுக்காமல் நடிகர் அர்ஜுனின் படத்தில் நடித்து கொடுத்தார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
You May Like This Video