திருநங்கைகளை கூட வைத்திருக்க காரணம் என்ன!! ஷகிலாவிடம் ஒப்பனா கேட்ட பயில்வான்..
சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைகளை படுமோசமான விமர்சித்து யூடியூப்பில் பகிர்ந்து வருபவர் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன். சமீபத்தில் நடிகைகளை அவதூறாக பேசியதாக கூறி அவர் மீது தயாரிப்பாளர் கே ராஜன், நடிகை ரேகா நாயர் போன்றவர்கள் கடுமையாக திட்டியும் சண்டையிட்டும் வருகிறார்கள்.
அந்தவகையில் நடிகை ஷகிலா எடுத்த பேட்டியொன்றில் பயில்வான் ரங்கநாதன் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்படி ஷகிலா பயில்வானிடம், என்னை பற்றிய ஒரு கிசுகிசுவை கூறுங்கள், நான் பீச்சிற்கு வாக்கிங் எல்லாம் வரமாட்டேன் என்று கேட்டுள்ளார்.
அதற்கு பயில்வான், கிசுகிசு எல்லாம் கிடையாது, எனக்கு தெரிந்தவரையில், ஷகிலா ஏன் திருநங்கைகளை கூட வைத்து உதவி செய்ய நிறுவனம் வைத்திருப்பது பல திருங்கைகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறீங்க ஏன் என்று கேட்டுள்ளார்.
அசோஷியேசன் வைத்துக்கொண்டு எல்லாம் நான் அதை செய்யவில்லை. நான் அவர்களை மகளாகவும் என்னை அவர்கள் அம்மாவாகவும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று ஓப்பனாக கூறியிருக்கிறார் நடிகை ஷகிலா.