என் மகள் அவரை தான் காதலிக்கிறார், பேசி பழகினார்கள்!! பயில்வான் ஓபன் டாக்
சில நாட்களுக்கு முன்பு, ஷகீலா பயில்வான் இடையே மோதல் ஏற்பட்டது. அதில், பயில்வானின் மகள் இன்னொரு பெண்ணை காதலிக்கிறார் என்று ஷகீலா தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பயில்வான் ரங்கநாதன், தனது மகள்குறித்து பேசியுள்ளார். அதில் அவர் பேசுகையில், என் மகளை பற்றி ஒரு நடிகை தகாத வார்த்தையை சொல்லிவிட்டார். அவரின் பெயரைக்கூட நான் சொல்லவிரும்பவில்லை. இதனால் என்னுடைய குடும்பத்தார் மிகவும் வருத்தப்பட்டனர். இந்த சூழலில் என் சம்பந்தி திருமணத்தை சீக்கிரமாக முடித்துவிடலாம் என்று சொன்னார். இதில் எங்க வீட்டில் உள்ளவர்களும், சம்மந்தி வீட்டில் உள்ளவர்களும் கலந்து கொண்டார்கள்.
மாப்பிள்ளை சிவா, என் மனைவியின் அண்ணனின் மகன் தான். ஏற்கனவே இருவரும் பேசி பழகினார்கள். நான் மனைவிடம் கலந்து பேசி திருமண தேதியை முடிவு செய்துள்ளோம்.
என் மருமகன் சிவா MBA படித்துள்ளார். என் மகள் B.COM படித்து இருக்கிறாள். இருவரும் ஐடியில் வேறு வேறு இடத்தில் வேலை செய்து வருகின்றனர்.
அந்த நடிகை என்னுடைய மகளை தவற பேசிட்டாங்க, அதன் விளைவை அவர் அனுபவிப்பார். எல்லாம் ஆண்டவன் பார்த்துக்கொள்வான் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்