ரெண்டு மணி நேரத்துக்கு 1300000 ரூபாய்.. புது ரூட்டில் நடிகை மீனா.. பயில்வான் சொன்ன ஷாக்கிங் தகவல்

Meena Actors Bayilvan Ranganathan Tamil Actors
By Dhiviyarajan Feb 18, 2024 03:00 PM GMT
Report

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார்.

தமிழில் முதல் படமே ஹிட்டாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. தற்போது மீனா சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சில படங்களில் நடித்து வருகிறார்.

ரெண்டு மணி நேரத்துக்கு 1300000 ரூபாய்.. புது ரூட்டில் நடிகை மீனா.. பயில்வான் சொன்ன ஷாக்கிங் தகவல் | Bayilvan Ranganathan Talk About Meena

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பயில்வான் ரங்கநாதன், மீனாவை பற்றி பேசியுள்ளார். அதில் அவர், அண்மையில் ஒரு பிரபல யூடியூப் சேனலுக்கு மீனாவை பேட்டி கொடுக்க கேட்டு இருக்கின்றனர். அதுக்கு மீனா எவ்ளோ மணி நேரம் என்று கேட்டு இருக்கிறார்.

அதற்கு யூடியூப் நிருபர் இரண்டு மணிநேரம் கூறியுள்ளார். உடனே மீனா அப்போ எனக்கு ரூ 13 லட்சம் தாங்க என்று கேட்டுள்ளார். அந்த யூடியூப் சேனலும் ரூ13 லட்சம் கொடுத்து பேட்டி எடுத்து உள்ளனர். ஒரு பேட்டிக்கே இப்படி பணம் கேட்டால் எப்படி என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.