பிரபுவை ஏமாற்றினாரா!! நயன் தாராவுக்கு ஏன் இவ்வளவு பணத்தாசை!! பயில்வான் காட்டம்..
பயில்வான் ரங்கநாதன்
சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி விமர்சித்து பேசி வருபவர் பயில்வான் ரங்கநாதன். தற்போது நடிகை நயன் தாரா செய்யும் செயலை கண்டித்தபடி சில சர்ச்சையான கருத்துக்களை கூறியிருக்கிறார். தனுஷை தொடர்ந்து ஆவணப்படத்தில் நயன் தாரா பிரபுவையும் ஏமாற்றிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
ஆவணப்படத்தின் மூலம் கோடிக்கணக்கில் பணம் பெற்ற அவர் அந்த படத்தின் காட்சிகள் பயன்படுத்தியதற்கு பணம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் பிரபுவிடம் அனுமதி வாங்காமலே சந்திரமுகி படத்தின் காட்சியை நயன் தாரா ஆவணப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.
நயன் தாரா
ஆனால் தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார். தற்போது பிரபு 5 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நயன் தாரா இன்னும் எத்தனை பேரை ஏமாற்றுவார்கள், இதற்கு ஒரு முடிவே இல்லையா, பிரபும் சந்திரமுகி படத்தை கஷ்டபப்ட்டுத்தானே எடுத்திருப்பார். அவரிடம் இவ்வளவு தான் கொடுக்க முடியும் என்று சொல்லி இருக்கலாமே. எதற்கு நயன் தாராவிற்கு இவ்வளவு பணத்தாசை, ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் பிரபுவையும் ஏமாற்றிவிட்டார்.
விக்னேஷ் சிவன் அம்மா வடபழகி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தார் என்ற திமிரில் தான் நயன் தாராவும் விக்னேஷ் சிவனும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் நயன் தாராவிற்கு நல்லதே இல்லை என்று பயில்வான் பேசியுள்ளார். இதில் பிரபு தரப்பில் சந்திரமுகி படத்தின் காட்சியை நயன் தாரா ஆவணப்படத்தில் பயன்படுத்தியது குறித்து எந்த பிரச்சனையும் இல்லை என்று அறிக்கையும் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.