விஜய்யை வம்புழுத்தி அசிங்கப்படுத்திய வடிவேலு!! பயில்வான் கொடுத்த வார்னிங்..
விஜய் - வடிவேலு
நடிகர் வடிவேலு கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலின் போது திமுகவிற்கு ஆதரவாக பேசி பிரச்சாரம் செய்தார். அப்போது விஜயகாந்தை கடுமையாக விமர்சித்து பகையை ஏற்படுத்திக்கொண்டார். இதனையடுத்து தனிப்பட்ட விஷயத்தில் சினிமா விஷயத்தில் பல சிக்கலில் மாட்டி விலகப்பட்டார். பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்க வந்துள்ள வடிவேலு, திமுகவிற்கு ஆதரவாக சென்னையில் நடந்த முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் மேடையில் பேசியிருந்தார்.
2026 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 200 தொகுதிக்கும் மேல் கைப்பற்றி ஆட்சியை பிடிப்பார் என்றும் விஜய்யை மறைமுகமாக தாக்கியும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பயில்வான் ரங்கநாதன்
இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், பெயர் வாங்க வேண்டும் என்று அசிங்கமாக பேசுவதும் அருவருப்பாக பேசுவதும் எல்லாம் பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போன்றதாகும். ஏதாவது சர்ச்சையில் சிகினால் என்றால் புழல் சிறைக்கு செல்ல வேண்டியதுதான். திறமை மீது நம்பிக்கை வைத்து அதன்மூலம் தான் புகழ பெறவேண்டுமே தவிர அடுத்தவர்களை விமர்சித்து அசிங்கிங்கப்படுத்தி புகழ் பெறக்கூடாது.
2011ல் விஜயகாந்த் மட்டுமில்ல ஜெயலலிதாவையும் அவதூறாக பேசினார் வடிவேலு. அதன்பின் தான் சினிமாவை விட்டு காணாமல் போனார். வடிவேலுவுக்கு வாழ்க்கை கொடுத்தது விஜயகாந்த் மற்றும் கமல் ஹாசன். அவர்கள் இருவரும் தான் மாறிமாறி அவருக்கு வாய்ப்பு கொடுத்தனர்.
அப்படிப்பட்டவர்களை பல இடங்களில் பேசியது வடிவேலுவுக்கு தான் தான் பின்னடைவாக அமைந்து படவாய்ப்பு இல்லாமல் போனார். இப்போது விஜய்யை பற்றி பேசுவது அவருடைய தனிப்பட்ட விஷயம். வடிவேலு இனிமேல் சினிமாவில் நடித்து பணம் சம்பாதித்து அதில் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை, அதனால் அவர் விஜய்யை பற்றி பேசுவது தனிப்பட்ட விருப்பம் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.