போதையில் உளறினாரா நடிகை ஜோதிகா!! புது குண்டைத்தூக்கி போட்ட பயில்வான்..
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ஜோதிகா. முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த ஜோதிகா, நடிகர் சூர்யாவுடன் காதல் வயப்பட்டு காத்திருந்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி, குடும்பம், குழந்தை என்று பார்த்து வந்தார். பிள்ளைகள் வளர்ந்த நிலையில் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஜோதிகா. சமீபத்தில், ஸ்ரீகாந்த் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளியான தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகியுள்ளது. ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்க இப்படம் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பிரமோஷனுக்காக பிரஸ் மீட் வைத்து பேசிய ஜோதிகா, ஓட்டு போடுவது பற்றியது சர்ச்சையானது. அவர் பேசியதை பயில்வான் விமர்சித்து பேசியிருக்கிறார்.
போதையில் உளறினாரா ஜோதிகா என்று ஆரம்பித்த பயில்வான், சென்னையில் படத்தின் பிரமோஷனுக்கு மும்பையில் இருந்து சென்னை பறந்து வந்தார். விமானத்தில் பறந்து வந்து சென்னை விமானநிலையத்தில் தங்கிவிட்டு பேட்டியும் கொடுத்து விட்டு மும்பைக்கே கிளம்பிவிட்டார். நான் முன்பே கூறினேன், ஜோதிகாவுக்கு சென்னை என்றால் வேப்பங்காய் போல் கசக்கிறது. மாமனார், மாமியார் முகத்தில் முழிக்க கூடாது என்று சென்னை வர பிடிக்காமல் மும்பைக்கே சென்றுவிட்டார்.
ஏன் ஓட்டு போட வரவில்லை என்று கேட்டதற்கு, வருடம் வருடம் நான் ஓட்டு போடுகிறேன், முக்கிய காரணங்களால் வரமுடியவில்லை, ஆன்லைனில் ஓட்டுபோட வசதி இருக்கு என்று சொன்னார் ஜோதிகா. ஏன்மா ஜோதிகா வருஷம் வருஷமா தேர்தல் வருது என்றும் தேர்தலில் ஆன்லைனில் எப்படி ஓட்டுப்போடலாம்னு யார் சொன்னா. அரசியலுக்கு வரவீங்களா என்றதற்கு யாரும் கூப்பிடல, இப்போதைக்கு இல்லை என்று கூறினீங்க.
ஒருவேலை யாராவது கூப்பிட்டால் போவீங்களா என்று பயில்வான் ஜோதிகாவிடம் கேள்வி கேட்டிருக்கிறார். விஜய் அரசியல் வருவது ஜோதிகாவுக்கு பிடிக்கவில்லையா? அதனால் தான் அவுட்டாஃப் டாப்பிக் என்று முகத்தில் கண்கள் கலங்குமாறு சொல்லி இருக்கிறாரே என்று பயில்வான் பேசியிருக்கிறார்.
