விசித்ரா சொல்றது எல்லாம் பொய்!! புது குண்டை தூக்கி போட்ட பயில்வான் ரங்கநாதன்..
உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7ல் விசித்ரா தனக்கு நடந்த பாலியல் சீண்டல் பற்றி பேசி இருந்தார். அதில் அவர் குறிப்பிட்ட பிரபல ஹீரோ பாலா கிருஷ்ணா தான் என்று நெட்டிசன்கள் ஒரு பக்கம் அவரை விளாசி வருகின்றனர்.
இதேசமயம் இதுகுறித்து இணையத்தில் வைரலானதை அடுத்து பல விசயங்கள் இதனால் வெளிச்சத்து வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து பல பிரபலங்கள் பேசி வரும் நிலையில் பயில்வான் ரங்கநாதன் விசித்ரா சொல்வதெல்லாம் பொய் என்றும் பிக்பாஸ் தான், இதை பேசவெச்சாங்க என்றும் கூறியுள்ளார்.
2000 ஆம் ஆண்டு நடந்த நடந்த சம்பவத்தை இப்போது பேச என்ன காரணம். அந்த ஓட்டல் மேனேஜர் இதற்கு உடைந்தையா? அப்போதே போலிஸ் நிலையத்தில் புகாரளிக்கலாம், குறித்த நடிகர் பெயர் சொல்லி இருக்கலாமே? என்று விளாசி இருக்கிறார்.
தமிழில் தான் அந்த மாதிரியான காட்சியில் நடித்தீர்கள். சொந்த மாநிலத்தில் தான் அவருக்கு அப்படி நடந்திருக்கிறது என்று கூறி விசித்ரா பேசியதுக்கு எதிராக பேசியிருக்கிறார் பயில்வான்.
மேலும் விசித்ரா பிக்பாஸ் நிகழ்ச்சியில் விளையாடவில்லை, ஓட்டு விழுவதற்காகவே இதையெல்லாம் பேசுகிறார் விசித்ரா என்றும் தெரிவித்துள்ளார். இப்படி பேசிய பயில்வானை நெட்டிசன்கள் கடுமையாக திட்டியவாறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.