பிக்பாஸ் ரித்விகா திருமணம் நிற்க என்ன காரணம்!! பயில்வான் ரங்கநாதன் ஓபன் டாக்..
பிக்பாஸ் ரித்விகா
ஒருநாள் கூத்து, பரதேசி, கபாலி, இருமுகன், ஓநாய்கள் ஜாக்கிரதை, டார்ச்லைட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரித்விகா. பிக்பாஸ் சீசன் 2 போட்டியில் கலந்து கொண்டு டைட்டிலை கைப்பற்றிய ரித்விகா, சினிமாத்துறையில் அடுத்தடுத்த வாய்ப்புகள் பெற்று நடித்து வந்தார்.

கடந்த ஆண்டு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார் ரித்விகா. நீண்டநாள் நண்பரான வினோத் லட்சுமணன் என்பவருடன் 2025 ஆகஸ்ட் மாதம் நிச்சயம் செய்தவர் எதிர்பாராத சூழ்நிலை காரணமாக திருமணத்தை ஒத்திவைத்ததாக அவர் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர் ஒருவர், உங்களுடைய திருமணத்தில் ஏதாவது பிரச்சனையா? என்று கேட்க அதற்கு ரித்விகா, வாழ்க்கையில் எல்லாம் நாம் நினைத்தபடி நடப்பதில்லை என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில் ரித்விகாவின் இந்த விவகாரம் குறித்து முத்த பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
திருமணம் நிற்க
அதில், ஒரு வருடத்திற்கு முன், தான் காதலித்த நீண்டநாள் நண்பரை நிச்சயதார்த்தம் செய்தார். திருமணத்திற்கான நாள் குறிக்கப்பட்ட நிலையில், என்ன காரணம் என்று தெரியவில்லை திருமணத்தை நிறுத்திவிட்டார்.
இப்போது அவர் அதிகாரப்பூர்வமாக, மீண்டும் திருமணம் நடக்காது என்று ரித்விகா அறிவித்துவிட்டார். ஆனால் நிச்சயதார்த்த புகைப்படங்களை டெலீட் செய்துவிட்டார், திருமணம் நிற்க என்ன காரணம் என்று தெரியவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.