விஜய்யுடன் விவாகரத்து.. வெளிநாட்டில் இருக்கிறாரா சங்கீதா.. உண்மையை போட்டு உடைத்த பயில்வான்
விஜய்க்கும் அவருடைய மனைவிக்கும் இடையே பிரச்சனை, இதனால் இருவரும் விவாகரத்து பெற்று பிரியப்போவதாக தொடர்ந்து பல கிசுகிசுக்கள் வெளியாகிறது.
ஆனால், இதுகுறித்து எந்த ஒரு உண்மையான தகவலும் வெளிவரவில்லை. விஜய் தரப்பில் இருந்தும் எதுவும் கூறவில்லை. இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் விஜய்க்கும், சங்கீதாவிற்கும் இடையே என்ன நடந்தது என்பது குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியதில், நடிகர் விஜய்க்கும் அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. சஞ்சய் மற்றும் திவ்யாவின் படிப்பிற்காக தான் சங்கீதா வெளிநாட்டில் இருக்கிறார். மற்றபடி விஜய்க்கும் சங்கீதாவிற்கும் இடையே எந்த ஒரு மனக்கசப்பும் இல்லை என கூறியுள்ளாராம் பயில்வான்.
இத்துடன் விஜய் - சங்கீதா விவகாரத்து சர்ச்சை நிற்குமா இல்லை மீண்டும் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..