மகன் திருமணத்திற்காக காசை வாரி இறைக்கும் நெப்போலியன்.. பயில்வான் சொன்ன தகவல்..

Napoleon Actors Tamil Actors
By Dhiviyarajan Jul 14, 2024 08:17 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் நெப்போலியன். இவர், ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரண்டு மகன்கள் உள்ளனர். நெப்போலியனின் மூத்த மகன்தனுஷ் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். மகனின் சிகிச்சைக்காக அமெரிக்க சென்ற நெப்போலியன் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

மகன் திருமணத்திற்காக காசை வாரி இறைக்கும் நெப்போலியன்.. பயில்வான் சொன்ன தகவல்.. | Bayilwan Ranganathan Speak Napoleon

இந்நிலையில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் பேசுகையில், "நெப்போலியன் தனது மகன் திருமணத்துக்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். தனுஷை திருமணம் செய்யப்போகும் பெண் நெல்லையை சேர்ந்தவர், மணமகள் வீட்டுக்கு வந்து மணமகன் தாலி கட்ட வேண்டும். ஆனால், தனுஷின் உடல்நிலை சரியில்லாததாலும், விமானத்தில் வர முடியாததாலும், கப்பலில் வருவதற்காக சொகுசு கப்பல் ஒன்றை நெப்போலியன் புக் செய்ய திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது".

"மேலும் திருமணத் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பதால், மணமகளை அமெரிக்காவுக்கு அழைத்து சென்று அங்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் ஒருபக்கம் நடந்து வருகிறது" என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.