விஜய் சார் பையன் கூடயாது.. இதுக்கே வழியில்ல அதுவேறையே!! அரங்கையே அதிரவைத்த பிக்பாஸ் நடிகை ரவீனா தாஹா..

Bigg Boss Serials jason sanjay Actress Raveena Daha
By Edward Apr 25, 2024 04:45 PM GMT
Edward

Edward

Report

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா, புலி படத்தில் குட்டி குழந்தையாக நடித்து பிரபலமாகி, ராட்சசன் படத்தில் பள்ளி சிறுமியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை ரவீனா தாஹா. இப்படங்களை தொடர்ந்து சிறுவயதிலேயே கவர்ச்சிகரமாக ஆட்டம் போட்டும் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். இதனை தொடர்ந்து மெளன ராகம் 2 சீரியலில் முக்கிய ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

விஜய் சார் பையன் கூடயாது.. இதுக்கே வழியில்ல அதுவேறையே!! அரங்கையே அதிரவைத்த பிக்பாஸ் நடிகை ரவீனா தாஹா.. | Bb7 Actress Raveena Open Act With Vijay Son Rumour

பின் இந்த ஆண்டு நிறைவு பெற்ற பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 91 நாட்கள் வீட்டில் இருந்து பின் எலிமினேட் செய்யப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் Jodi Are U Ready நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுது போட்டி வரை சென்றிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் Half Bottle என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ள ரவீனா, பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது, ஏன் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கும், போட்டியாளராக பங்கேற்பீர்களா என்றும் பத்திரிக்கையாளர்கள் கேட்டுள்ளனர்.

விஜய் சார் பையன் கூடயாது.. இதுக்கே வழியில்ல அதுவேறையே!! அரங்கையே அதிரவைத்த பிக்பாஸ் நடிகை ரவீனா தாஹா.. | Bb7 Actress Raveena Open Act With Vijay Son Rumour

அதற்கு ரவீனா, எனக்கு குக் வித் கோமாளி குழுவில் இருந்து ஒரு எபிசோட்டிற்கு வருவதற்காக கால் செய்து கூப்பிட்டார்கள். இப்போது தான் ஜோடி நிகழ்ச்சியின் இறுதி போட்டி சென்றுக்கொண்டிருக்கிறது என்பதால் என்னால் போகமுடியவில்லை.

எனக்கு தெரிந்து நான் போவேனா என்று தெரியவில்லை. ஏனென்றால் எனக்கு நகைச்சுவை வரமாட்டிங்குது, அதை மறைத்து பிரயோஜனம் இல்லை என்றும் அவ்வளவு நல்ல நல்ல கோமாளிகள் இருக்கும் போது நான் எதுக்கு என்று நான் நினைப்பதாக ரவீனா தெரிவித்தார்.

விஜய் சார் பையன் கூடயாது.. இதுக்கே வழியில்ல அதுவேறையே!! அரங்கையே அதிரவைத்த பிக்பாஸ் நடிகை ரவீனா தாஹா.. | Bb7 Actress Raveena Open Act With Vijay Son Rumour

கோமாளியாகவே வழியில்லையாம், இதுல குக்-ஆக வேறையா என்று கூறியிருக்கிறார். மேலும், விஜய் சார் மகன் இயக்கத்தில் ஹீரோயினா நடிக்க போறீங்கன்னு பேட்டியொன்றில் கூறியது பற்றி பத்திரிக்கையாளர் கேட்டுள்ளார்.

திருமணமான பிரபல நடிகருடன் டின்னர் சென்ற நடிகை சமந்தா.. அதுவும் ஒரே பிளேட்டில் கேக்..

திருமணமான பிரபல நடிகருடன் டின்னர் சென்ற நடிகை சமந்தா.. அதுவும் ஒரே பிளேட்டில் கேக்..

அதற்கு ரவீனா, ஐயா, அந்த வீடியோவை திரும்பவும் பாருங்க, எந்த நடிகருடன் நடிக்க ஆசைன்னு கேட்டாங்க, விஜய் சார் கூட நடிக்கனும்னு ஆசை, ஆனா அவர்கூட நடிக்க முடியுமான்னு தெரியல. அவர் பையன் கூடவாது நடிக்க முடியுமான்னு பார்ப்போம் என்று தான் நான் சொன்னேன். தயவு செய்து அதை திருப்பி பாருங்க என்று காமெடியாக சிரித்தபடி பேசி அரங்கையே அதிரவைத்திருக்கிறார் ரவீனா தாஹா.