சாண்ட்ராவை அசிங்கப்படுத்துவது திவ்யாவின் PR தான்!! எவிக்டாகிய பிரஜன் ஓபன் டாக்..
பிக்பாஸ் 9 பிரஜன்
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 70 நாட்களுக்கும் மேல் சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 9ல் இருந்து கடந்த வாரத்திற்கு முன் பிரஜன் எவிக்டாகி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.

தற்போது பிரஜன் ஒரு லைவ் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில், தான் பேமிலி ரவுண்ட்டில் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் போகும்போது சான்ராவிடம் சில விஷயங்களை கேட்கப் போவதாக கூறியிருக்கிறார். சில வாரங்களாகவே சாண்ட்ரா, திவ்யாவை பற்றி குறைமேல் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
அதுவும் 15 ஆம் தேதி பிரமோவில் சாண்ட்ரா, பிரஜன் என்னைவிட திவ்யாவிடம் தான் நெருக்கமாக இருந்தார், ஆனால் திவ்யா பிரஜனையும் என்னையும் ஏமாற்றிவிட்டார், நான் வெளியே செல்ல வேண்டும் என்பதுதான் திவ்யாவின் ஆசை என்று சாண்ட்ரா கூறியிருக்கிறார்.

திவ்யாவின் PR
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரஜன் இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோவில் சில விஷயங்களை பேசியிருக்கிறார். பிக்பாஸ் விட்டிற்குள் ஒரு பிரச்சனை நடந்தால் அது வெளியே வேறுவிதமாக காட்டப்படும். சாண்ட்ராவை பலரும் திட்டிக்கொண்டிருக்கிறார்.
சாண்ட்ராவிற்கு திவ்யா மீது கோபம் இருக்கிறதுதான், ஆனால் அவர் தவறாக எதுவும் சொல்வதுபோல் தெரியவில்லை. ஒருவேளை சாண்ட்ரா தவறாக சொல்லியிருக்கிறார், அது அவருடைய தவறுதான். ஆனால் சாண்ட்ராவை அசிங்கப்படுத்துவது திவ்யாவின் பிஆர் டி தான்.

இதற்கு முன் வினோத்தை தவறாக பேசிக் கொண்டிருந்தார்கள். இப்போது சாண்ட்ராவை டார்க்கெட் செய்கிறார்கள். வேற எல்லா போட்டியாளர்களுக்கும் பி ஆர் இருந்தாலும் அவர்கள் அவர்களுடைய போட்டியாளர்களை தான் பெருமைப்படுத்தி காட்டுவார்கள். ஆனால் திவ்யாவின் பி ஆர் டீம் அடுத்தவர்களை மோசமாக சித்தரிக்கிறார்கள்.