சக நடிகரை திட்டிய செல்வராகவன் மேனேஜர்! கோபத்தின் உச்சுக்கே சென்ற பீஸ்ட் பட அரசியல்வாதி..
தமிழ்சினிமாவின் முன்னணி நடிராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட். சில தினங்களுக்கு முன் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது.
முதல் நாளில் படைத்த சாதனை வசூல் அடுத்தடுத்த நாட்களில் படுபயங்கரமாக குறைய ஆரம்பித்து விட்டது. தற்போது பீஸ்ட் ஸ்கிரீன்கள் குறைக்கப்பட்டு கேஜிஎஃப் 2 படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் பீஸ்ட் படத்தில் செல்வராகவனுடன் பயணிக்கும் அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்த Shaji Chen பேட்டி கொடுத்துள்ளார். படப்பிடிப்பு முதல் நாள் ஆரம்பித்து தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
முதல் நாள் படப்பிடிப்பின் போது எனக்காக ஒதுக்கப்பட்ட கேரவன் அறைக்கு சென்ற் நான் ஒருவரிடம் போனில் பேசிக்கொண்டிருந்தார். நான் பேசுவது கொஞ்சம் சத்தமாக இருந்ததால் பக்கத்து அறையில் இருந்து ஒருவர் கதவை தட்டி ஏன் இப்படி சத்தமாக பேசுகிறீர்கள் அவர் எவ்வளவு பெரிய இயக்குனர் தெரியுமா என்று கத்திவிட்டு சென்றார்.
ஒருவேலை நெல்சனை அவர் சொல்கிறாரா? என்று குழப்பத்தில் இருந்தேன். அவர் மீண்டும் என்னிடம் கத்தி பேச எனக்கு கோபம் வந்தது. பெரிய டைரக்டர் சிறிய டைரக்டர் என்று என்னிடம் சொல்றீங்களா அதை பொருமையாக பேசுங்கள் என்று கூறுங்கள் என அவரிடம் தெரிவித்தேன்.
அதன்பின் தான் செல்வராகவன் பக்கத்தில் இருப்பதாக தெரிய வந்தது. பின் செல்வராகவன் கேரவனை மாற்றி விட்டார்கள் என்று கூறியுள்ளார் ஷாஜி சென்.