காப்பி அடிச்சது நம்ம பாட்டா! விஜய் ரசிகர்களை குழப்பிய அனிரூத்-சிவா
தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பெயரை ரசிகர்கள் அழைத்தும் தளபதி என்று பல ஆண்டுகளாக முடிசூடா மன்னனாக பட்டையை கிளப்பி வருகிறார் நடிகர் விஜய். தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் படத்தை வருகிற ஏப்ரல் 14ல் வெளியிடவுள்ளார்.
இந்நிலையில் அப்படத்தின் முதல் பாடல் அனிரூத் இசையில் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் வரும் காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், முதல் பாடல் அரபிக் குத்து மையமாக வருவதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இதற்கு முன்பே இந்த க்ளி்ப்ஸ் எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதே என்று பலர் கருத்துக்களை கூறி வந்தனர். தற்போது அது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டான் படத்தில் தீம் மியூசிக் போன்றே இருக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
அந்த படத்திற்கு அனிரூத் தான் இசையமைத்துள்ளார். அப்படியென்றால் காப்பி அடிக்கலாம் அதுவும் நம்ம பாட்டுன்னே தெரியாம காப்பி அடிக்கக்கூடாது அனி என்று கிண்டல் செய்து வருகிறார்கள். மேலும் கில்லி படத்தின் சில பிஜிஎம் போலவும் இருப்பதாக கூறுகிறார்கள்.