அடிமேல் அடி வாங்கும் பீஸ்ட்! விஜய்க்கு இப்படி நாமம் அடிச்சிட்டியே நெல்சா?
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் இதுவரை தமிழகம் தாண்டி உலக அளவில் தன் படத்தை வைத்து பல பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட்களை வைத்துள்ளார். பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று இருந்த விஜய்க்கு பீஸ்ட் படம் பல அடிகளை கொடுத்துள்ளது.
இதற்கு காரணம் பீஸ்ட் படத்தின் கதை தான். முதல் நாள் முதல் காட்சி முடிந்த பிறகு பீஸ்ட் படத்தின் வசூல் குறைய ஆரம்பித்தது. ஆனால் பீஸ்ட்க்கு அடுத்த நாள் வெளியான கேஜிஎஃப் 2 இதுவரையில் 1000 கோடி அளவில் வசூல் வேட்டை செய்துள்ளது.
எப்போதும் அமெரிக்காவில் தமிழ் படங்களில் நடிகர் விஜய் தான் கிங். கேஜிஎஃப் 2வை விட அமெரிக்காவில் பீஸ்ட் படம் பெரிய அடியை கொடுத்துள்ளது. அதன்படி கே.ஜி.எப் 2 - $132,568 அதாவது இந்திய மதிப்பின் படி (10,137,896.82) ,ஒரு கோடிக்கும் அதிகம். RRR-$10,513 இந்திய மதிப்பின் படி (803,957.82) 8 லட்சத்திற்கும் அதிகம்.
பீஸ்ட்- $5,059 இந்திய மதிப்பின் படி ( 386,877.83 ) மூன்று லட்சத்திற்கும் அதிகம். இதற்கெல்லாம் நெல்சன் தான் காரணம் என்று ரசிகர்கள் பலர் புலம்பி வருகிறார்கள்.