சூப்பர்ஹிட் படத்தின் காப்பியா பீஸ்ட்! விடாமல் ஓட்டும் நெட்டிசன்கள்..

vijay nelson anirudh poojahegde beast mallcop
By Edward Apr 05, 2022 03:15 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். பொங்கல் கழித்து வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக தற்போது ஏப்ரல் 13 ஆம் தேதி தள்ளிப் போகியுள்ளது.

படத்தின் மீது ரசிகர்கள் அதிகளவில் எதிர்ப்பார்ப்பை தூண்டும் விதமாக அரபிக்குத்து, ஜாலி ஓ ஜிம்கானா பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சில காரணங்களால் தடை செய்துள்ள பீஸ்ட் குழு மீது ரசிகர்கள் மிகுந்தை சங்கடத்தில் இருந்து வந்தனர்.

இதனால் சில தினங்களுக்கு முன் முதுகில் குத்திய நெல்சன், சன் பிக்சர்ஸ் என்று ஹாஸ்டேக்கினை வைரலாக்கினர். சமீபத்தில் பீஸ்ட் படத்தின் டிரைலர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே படத்தின் பாடல்கள் காப்பி அடித்ததாக அனிருத்தினை ஓட்டி வந்த ரசிகர்கள் படத்தின் கதையையும் விட்டு வைக்காமல் டிரைலரையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் ஹாலிவுட்டில் 2009ஆம் ஆண்டு வெளியான மால் காப் எனும் திரைப்படத்தின் தழுவல் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தமிழில் வெளியான கூர்கா திரைப்படத்தின் செயலிலும் படம் இருப்பதாக கூறப்படுகிறது. மால் காப் படத்தில் ஒரு மாலின் செக்யூரிட்டி அதிகாரி அங்கு நடைபெறும் கொள்ளையில் இருந்து மக்களையும் உடைமைகளிலும் காப்பாற்றுகிறார் என்பதே கதைக்களம்.

இந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து கடந்த 2015இல் மால் காப் திரைப்படத்தின் 2ஆம் பாகமும் வெளியாகவுள்ளது. என்னதாம் படத்தில் மற்ற படங்களின் சாயல் இருந்தாலும் படம் வெளி வந்த பிறகு தான் படம் எப்படி இருக்கிறது என கூற முடியும் என விஜய் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

Gallery