விஜய் படம்னாலே இது இருக்கத்தான் செய்யும்! பீஸ்ட்-க்கு தடையா?
vijay
nelson
sunpictures
beast
By Edward
தமிழ்சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். அவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது.
மாலில் மாட்டிக்கொள்ளும் விஜய் மக்கள் எப்படி தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றப்படுகிறார் என்பது தான் கதை. முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து படம் எடுக்கப்பட்டதால் தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சித்தலைவர் முஸ்தபா அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
சினிமாத்துறையில் பெரும்பாலும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இதனால் பீஸ்ட் படத்தினை வெளியிடாமல் இருக்க தடை செய்யக் கோரியுள்ளார்.
மேலும் குவைத் நாட்டில் பீஸ்ட் படத்தினை வெளியிட தடைவிதித்துள்ளது அந்நாட்டின் அரசாங்கம்.