கதறி அழும் விஜய் ரசிகர்கள்! ஒரு முடிவுக்கு வாங்கண்ணே!! தளபதியால் இப்படியொரு நிலையா?

vijay sunpictures beast
By Edward Mar 29, 2022 11:00 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். மாஸ்டர் படத்திற்கு ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை கிளப்பி வருகிறது பீஸ்ட் படம். அடுத்த மாதம் ஏப்ரல் 13ல் வெளியாக திட்டமிட்ட பீஸ் படக்குழு இன்னும் அடுத்தக்கட்ட அப்டேட் எதுவும் வெளியிடாமல் வருகிறார்கள்.

சோகத்தில் கதறும் ரசிகர்கள்:-

மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு கடந்த மாதம் படத்தில் இல்லாத பாடல்களை வெளியிட்டு பிரமோஷன் செய்த படக்குழுவினர், ஆடியோ லான்ச்சையும் வேண்டாம் என்று கூறிவிட்டனர். இதனால் கடுமையான கோபத்தில் விஜய் ரசிகர்கள் இருந்து வந்தனர்.

அப்படியிருக்கையில் படம் வெளியாக இருவாரங்களே இருக்கும் நிலையில் படத்தின் ஒரு டீசராவது படக்குழுவினர் வெளியிடுவது பற்றி எதையும் கூறாமல் இருக்கிறார்கள்.

அப்படியொரு அப்டேட் கொடுங்களேன் சன் பிக்சர்ஸ் என்று விஜய் ரசிகர்கள் சமுகவலைத்தளத்தில் கதறி கருத்துக்களை கூறி வருகிறார்கள். ஏப்ரல் 1ஆம் தேதி ஏமாற்றும் நாள் இருப்பதால் அப்போது படத்தின் அப்டேட் எதுவும் வெளியிடப்படாது என்று கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

GalleryGalleryGalleryGalleryGallery