ஓ இதான் பீஸ்ட் மோடா? விஜய் கால் வைத்திருப்பதை கலாய்க்கும் நெட்டிசன்கள்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் ஏப்ரல் 13 ஆம் தேதி தியேட்டர்களில் ஒளிப்பரப்பாகவுள்ள படம் பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பிரமோஷன் கடந்த சில மாதங்களுக்கு முன்பே பாடல்கள் மூலம் ஆரம்பித்தது.
அரபிக்குத்து, ஜாலியா ஓ ஜிம்கானா, பீஸ்ட் டிரைலர் என ரசிகர்களுக்கு டிரீட்டாக அமைந்து வந்தது. தற்போது படம் வெளியாக ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் வரும் 10 ஆம் தேதி விஜய்யுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவுள்ளது.
ஷாப்பிங் மாலை ஹைஜாக் செய்யும் கதையாக உருவாகும் இப்படத்தின் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி வைலராகியுள்ளது. இதை ரசிகர்களும் போஸ்டர், பேனர், பெயிண்ட்டிங் போன்றவற்றைவைகளை செய்து கொண்டாட்டத்தை ஆர்ம்பித்துள்ளனர்.
இதில் ஒரு ஏரியாவில் பீஸ்ட் படத்தின் ஒரு புகைப்படத்தை வைத்து அமைத்துள்ளனர். விஜய் கால் வைத்திருப்பதை நெட்டிசன்கள் பீஸ்ட்-டின் முரட்டு சம்பவம் லோடிங் என கூறியதோடு ஃபையர் எமோஜியையும் வைத்து இணையத்தில் பதிவிட்டு பகிர்ந்து வருகிறார்கள்.
முரட்டு சம்பவம் லோடிங் ?? pic.twitter.com/kCYKCUKYbx
— RamKumarr (@ramk8060) April 8, 2022