தனுஷ் - ஐஸ்வர்யா திருமணத்தில் இத்தனை பிரச்சனையா? பொறுத்துக்கொண்ட ரஜினிகாந்த்..

divorce dhanush rajinikanth sons aiswarya
4 மாதங்கள் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் பல கஷ்டங்களை தாண்டி பல விருதுகளை பெற்று சூப்பர் ஆக்டர் என்ற பெயரை பெற்றவர் நடிகர் தனுஷ். 2004ல் நல்ல இடத்திற்கு வர ஆரம்பித்த தனுஷை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து வைத்தார். 18 வருட திருமண வாழ்க்கையில் யாத்ரா - லிங்கா என இரு மகன்கள் இருக்கிறார்கள்.

தற்போது இருவரும் வளர்ந்த தருவாயில் தனுஷ் ஐஸ்வர்யா தங்களின் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இந்த செய்தி இந்தியா சினிமாவையே அதிர வைத்ததுள்ளது.

இந்நிலையில் இதுபற்றி சில தினங்களுக்கு முன்பே நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் இவர்களின் திருமணம் பற்றிய செய்தியை பகிர்ந்துள்ளார்.

ரஜினி மகள் ஐஸ்வர்யாவையும், நடிகர் தனுஷையும் தொடர்புபடுத்தி எழுதியதாலே திருமணம் செய்து வைக்க நேரிட்டது. இந்த திருமணம் கிசு கிசு திருமணம்தான் என்று குறிப்பிட்டதோடு இருவருக்கும் வயது வித்யாசம் இருந்துள்ளது என சமீபத்தில் பேட்டியொன்றில் பேசியுள்ளார் பயில்வான்.

நடிகர் தனுஷ் தங்கையும் ரஜினி மகள் ஐஸ்வர்யாவும் நெருங்கிய தோழிகள் என்பதால் சிலர் இதை காதல் என்று சர்ச்சை கருத்தை பரப்பினர். இதற்கு தனுஷ் மறுப்பு தெரிவித்தும் சர்ச்சைகள் எழுந்து பரவின. இந்த சர்ச்சையை நிறுத்த இருவரிடமும் சுமுகமாக பேசியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இதனை அடுத்து இருவரது குடும்பத்தினரும் தங்கள் குழந்தைகள் மத்தியில் உருவான இந்த காதல் விவகாரம் குறித்து இணைந்து பேசி சுமூகமாக முடிவெடுத்தனர்.

இவர்கள் இடையே வயது வித்தியாசம் இருந்தாலும், தன்னை விட வயது மூத்தவரான ஐஸ்வர்யா ரஜினியை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார் தனுஷ். அவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்ததாக கூறியுள்ளார் பயில்வான்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.