யார் பிரச்சனை கொடுக்கிறார்கள்! உண்மையான காரணத்தை சொன்ன சிவகார்த்திகேயன்..
அறிமுக இயக்குநரான சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா லீட் ரோலில் நடித்து இன்று வெளியாகியுள்ள படம் தான் தாய் கிழவி. பல வெற்றிப்படங்களை தயாரித்தப்பின் தாய் கிழவி படத்தை தயாரித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இப்படம் தற்போது ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை விமர்சனத்தையும் பெற்று வருகிறது. படத்தை இன்று பார்த்துவிட்டு ராதிகாவுடன் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்து சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.
யார் பிரச்சனை கொடுக்கிறார்கள்
அப்போது செய்தியாளர் ஒருவர் சிவகார்த்திகேயனிடம், ஒவ்வொரு பட வெளியீட்டிலும் எனக்கு இடையூறு செய்கிறார்கள் என்று கூறுகிறீர்களே, உங்களுக்கு யார் இடையூறு கொடுக்கிறார்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு சிவகார்த்திகேயன், பல செய்தியாளர்கள் அது யார் என்று சொல்லுங்க என்று கேட்கிறார்கள், அதை நான் சொல்வதால் பல யூடியூப் சேனல்களுக்கு வியூஸ் அதிகரிக்கும். நான் இப்படி சொல்வதற்கான காரணம் ஒருவரை குறை சொல்ல வேண்டும் என்பதற்கு இல்லை, இவ்வளவு பெரிய தடைகளை தாண்டி வருகிறோம் என்று அனைவருக்கும் தெரியவேண்டும் என்பதற்கு தான் சொல்கிறேன் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து இதுபோன்ற கேள்வி வருவதால், இனி அப்படி சொல்வதை தவிர்த்துவிடுகிறேன். ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல விஷயங்களையும் கடந்து வந்திருப்போம். நான் இந்த இடத்தில் நிற்பதற்கான காரணம், ரசிகர்களாகிய நீங்கள் தான்.
உங்களால் தான் பல தடைகளை தாண்டி இந்த இடத்தில் வந்து இருக்கிறேன் என்று அவர்களுக்கு சொல்வதற்காக தான், நான் அதை சொல்கிறேனே தவிர மற்றவர்களை குறை சொல்வதற்காக நான் அதை சொல்லவில்லை என்று சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.