அட்லீ பிறந்தநாள் பார்ட்டி! குழந்தை பிறந்து கணவர் ஆர்யாவுடன் நடிகை சாயிஷா எடுத்த முதல் புகைப்படம்!

atlee arya priya tamilactress sayyesha
By Edward Sep 22, 2021 12:00 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக இருந்து படங்கள் ஓரளவிற்கு வெற்றி பெற்றாலும் நல்ல இடத்தினை பிடித்து சாக்லேட் பாய் என்ற பேர் பெற்றவர் நடிகர் ஆர்யா. சமீபத்தில் கஜினிகாந்த் படத்தில் நடிகை சாயிஷாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.

படத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கெமிஸ்டி ரியல் வாழ்க்கையிலும் ஒற்றுப்போக காதலித்து வயது வித்யாசமின்றி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் படங்களில் நடித்து வந்த நிலையில் நடிகை சாயிஷா கர்ப்பமாகி பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார் என்ற செய்தியை நடிகர் விஷால் அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

எப்போதும் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வந்த சாயிஷா கர்ப்பகாலங்களில் அங்கு செல்லாமல் இருந்து வந்தார். சமீபத்தில் குழந்தை பெற்றபிறகு பல நாட்கள் கழித்து செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டார். தற்போது கணவர் ஆர்யாவுடன் இயக்குநர் அட்லீ பிறந்த நாளுக்கு இரவு பார்ட்டியொன்றில் கலந்து கொண்டுள்ளார். அவருடன் அட்லீ மனைவி பிரியாவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார் ஆர்யா.