சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு விருந்து வைத்த பாடகர் பென்னி! ஒதுங்கி இருந்த வின்னர் ஸ்ரீதர் சேனா..

bennydayal sridharsena supersinger8
By Edward Sep 28, 2021 02:05 PM GMT
Report

தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். 8 வது சீசன் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் டைட்டிலை வென்று மகுடம் சூடியவர் ஸ்ரீதர் சேனா. இரண்டாம் இடம் சரத்தும், மூன்றாம் இடம் அபிலாஷும் இடம் பிடித்தனர். மேலும் மக்களின் விருப்பமான போட்டியாளர் என முத்துச்சிற்பியும் தேர்வு செய்யப்பட்டார்.

சூப்பர் சிங்கர் 8 முடிந்த சில நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு விருந்து வைத்து மகிழ்ந்துள்ளார் பாடகரும் நடுவருமான பென்னி தயாள். ஏற்கனவே ஸ்ரீதர் சேனா, மானசி உள்ளிட்ட போட்டியாளர்கள் வெளியேறியது பற்றி ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்துள்ளதால் அடுத்து வரும் நிகழ்ச்சியில் நானில்லை என்று கூறியிருந்தார் பென்னி.

இந்நிலையில் அடுத்த சீசனில் நானில்லை என்பதற்காக போட்டியாளர்களுக்கு பாடகர் பென்னி விருந்து வைத்துள்ளார் என்றும் ஸ்ரீதர் சேனாவுடன் இணைந்து அந்த விருந்தில் புகைப்படம் எடுக்கவில்லை என்றும் பெரும்பாலும் அவர்கள் தள்ளியே இருந்து வந்தனர் என்றும் கூறி வருகிறார்கள்.

GalleryGalleryGallery