கமல், ரஜினியை வைத்து இயக்காததற்கு இதுதான் காரணம்? பல ஆண்டு ரகசியத்தை கூறிய பாக்கியராஜ்..

rajinikanth k bhagyaraj kamalhaasan
By Edward Apr 15, 2021 05:50 AM GMT
Report

திரைக்கதை ஆசிரியருக்கென்றே உரித்தான பெயரை கொண்டவராக தமிழ் சினிமாவில் போற்றப்பட்டவர் இயக்குநர் பாக்கியராஜ். பெண்களை வைத்து மோசமாக படம் எடுத்தாலும் அவர்களாலும் பெரியளவில் ஈர்த்தவர் பாக்கியராஜ்.

அந்த காலத்தில் அதிக பெண் ரசிகைகளை வைத்திருந்த நடிகர்களில் இவரும் ஒருவர். பாக்கியராஜ் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது பாக்யராஜ் பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கியிருந்தாலும் அந்த படங்களில் அவர் பயன்படுத்திய முருங்கைக்காய் தான். இயக்குநராக ஆரம்பித்து பின் நடிகராகவும் பட்டையை கிளப்பினார்.

ஆனால் ரஜினி, கமலை வைத்து இன்னும் இயக்கவில்லை என்ற கேள்விக்கு பேட்டியொன்றில் பதில் அளித்துள்ளார். தான் இயக்கிய படத்தில் மற்றவர்களை வைத்து நடித்தால் காமெடி வராமல் தனக்கென கதையையே எழுதினார். இதன் காரணமாக தன்னைத் தாண்டி மற்ற நடிகர்களை வைத்து படம் இயக்க யோசிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிறகு நடிகராக மார்க்கெட் குறைந்த பிறகு விஜயகாந்தை வைத்து சொக்கத்தங்கம் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தேன். அதன்பின் ரஜினி, கமலுக்கு படம் இயக்கலாம் என்ற வகையில் அவர்களது சினிமா வேறு பாதையில் சென்று கொண்டிருப்பதை உணர்ந்து அவர்களை தொடர்பு கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கமலின் சிகப்பு ரோஜாக்கள், ரஜினியின் நான் சிவப்பு மனிதன், அன்புள்ள ரஜினி காந்த் போன்ற படங்களில் கதையாசிரியராகவும், சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்தேன் என்று கூறியுள்ளார்.